நடிகர் கமல்ஹாசனுக்கு எதிராக வக்கீல்கள் போராட்டம்
நடிகர் கமல்ஹாசனை கண்டித்து கோவை கோர்ட்டு முன் நேற்று டி.டி.வி.தினகரன் ஆதரவு வக்கீல்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை,
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற டி.டி.வி.தினகரன் குறித்து விமர்சனம் செய்த நடிகர் கமல்ஹாசனை கண்டித்து கோவை கோர்ட்டு முன் நேற்று டி.டி.வி.தினகரன் ஆதரவு வக்கீல்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு கமல்ஹாசனை கண்டித்து கோஷமிட்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது திடீரென்று நடிகர் கமல்ஹாசன் உருவப்படத்தை அவர்கள் தீ வைத்து எரித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து வக்கீல்கள் கூறுகையில், ‘இனி வரும் காலங்களில் நடிகர் கமல்ஹாசன் இவ்வாறு பேசி வந்தால், அவரது படத்தை ஓட விட மாட்டோம். கமல்ஹாசன் தனது படத்தை ஓட வைப்பதற்காக தான் டி.டி.வி.தினகரன் குறித்து பேசி விளம்பரம் தேடி கொள்கிறார். இனி அவர் தினகரன் குறித்து பேசுவதை நிறுத்தி கொள்ள வேண்டும்’ என்று தெரிவித்தனர்.
Related Tags :
Next Story