பணிக்கு திரும்பாத பஸ் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் அமைச்சர் எச்சரிக்கை
பணிக்கு திரும்பாத பஸ் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறினார்.
கரூர்,
போக்குவரத்து கழக தொழிலாளர்களின் 13-வது ஊதிய ஒப்பந்தம் என்னுடைய தலைமையில் (எம்.ஆர்.விஜயபாஸ்கர்) 11 முறை பேச்சுவார்த்தை நடந்தது. எங்களுடைய அதிகாரிகளோடு துணை கமிட்டி மூலம் 12 முறை பேச்சுவார்த்தை நடந்தது. ஆக மொத்தம் 23 முறை பேச்சுவார்த்தை நடந்தது. அந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு கையெழுத்தும் ஆகி உள்ளது. தொ.மு.ச., சி.ஐ.டி.யூ. உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் அதனை ஏற்காமல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரசும், மற்ற தொழிற்சங்கங்களும் சேர்ந்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதை தடுக்கும் வகையில் பஸ்களை இயக்கி வருகிறது.
போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு கடந்த 15 ஆண்டுகளாக வழங்கப்படாமல் இருந்த நிலுவை தொகை ரூ.1,500 கோடியை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கியிருக்கிறார். போக்குவரத்து துறை வரலாற்றில் இல்லாத அளவில் தற்போது ஊதிய உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்த ஊதிய உயர்வை ஏற்று ஊழியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும். இதேபோல போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தை கைவிட்டு வேலைக்கு திரும்ப சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ளனர். நீதிமன்ற உத்தரவை மதித்து ஊழியர்கள் பணிக்கு திரும்புவார்கள் என நம்புகிறோம். நேற்றை விட (அதாவது நேற்று முன்தினம்) இன்று (அதாவது நேற்று) அதிகமான ஊழியர்கள் பணிக்கு வந்துள்ளனர். போக்குவரத்து ஊழியர்களுக்கு இந்த அரசு என்றென்றும் துணை நிற்கும்.
கரூரில் 100 சதவீதம் அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது. மேலும் ஒரு சில இடங்களில் பணிக்கு செல்பவர்களை சிலர் தடுத்து நிறுத்துகின்றனர். இது தவறான செயலாகும். அவ்வாறு பணிக்கு செல்பவர்களை தடுத்து நிறுத்துபவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். நாளைக்குள்(அதாவது இன்று) முழுமையாக போக்குவரத்து ஊழியர்கள் பஸ்களை இயக்குவார்கள் என நம்புகிறோம். உயர்நீதிமன்ற உத்தரவை சட்டப்படி சந்திப்பதாக தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். உயர்நீதிமன்றத்தில் தொழிற்சங்கத்தினர் தங்களது கோரிக்கையை தெரிவிப்பார்கள்.
அரசு தரப்பிலும் ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட நிலுவை தொகை, ஊதிய உயர்வு உள்ளிட்டவை குறித்து தெரிவிக்கப்படும். அதன்பின் இறுதி முடிவை நீதிபதிகள் அறிவிப்பார்கள். ஆனால் ஊழியர்கள் அனைவரும் பணிக்கு திரும்ப வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனை மதித்து ஊழியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும்.
பணிக்கு திரும்பாத ஊழியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். தற்காலிக டிரைவர்கள், கண்டக்டர்கள் மூலம் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 80 சதவீதம் அரசு பஸ்கள் இயக்கப்படும். பஸ் கட்டண உயர்வு என்பது அரசின் கொள்கை முடிவு. அதனை முதல்-அமைச்சர் அறிவிப்பார்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story