எம்.கே.பி.நகரில் மாநகர பஸ் மீது கல்வீச்சு; கண்ணாடி நொறுங்கியது
எம்.கே.பி.நகரில் மர்மநபர்கள் மாநகர பஸ்சை வழிமறித்து கல்வீசி தாக்கினர். இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி நொறுங்கியது.
பெரம்பூர்,
போக்குவரத்து தொழிலாளர் கள் வேலை நிறுத்தம் காரண மாக குறைந்த அளவு பஸ்களே இயக்கப்படுகின்றன. சென்னை தண்டையார்பேட்டை பணிமனையில் உள்ள மாநகர பஸ் (தடம் எண் 157) நேற்று திருவொற்றியூரில் இருந்து செங்குன்றம் நோக்கி சென்று கொண்டிருந்தது. பஸ்சை தற்காலிக டிரைவரான காலடிப்பேட்டையை சேர்ந்த பாஸ்கர்(வயது 23) என்பவர் ஓட்டினார்.
எம்.கே.பி.நகர் மத்திய நிழற்சாலையில் சென்ற போது, திடீரென மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்மநபர்கள் மாநகர பஸ்சை வழிமறித்து கல்வீசி தாக்கினர். இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி நொறுங்கியது. உடனே மர்மநபர்கள் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர்.
அதிர்ஷ்டவசமாக பஸ்சில் இருந்த பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதுதொடர்பாக பஸ் டிரைவர் பாஸ்கர் அளித்த புகாரின் பேரில் எம்.கே.பி.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story