மங்களூருவில் வெட்டிக்கொல்லப்பட்ட பா.ஜனதா தொண்டரின் தாயாரின் வங்கி கணக்கில் குவியும் நிவாரண நிதி
மங்களூருவில் வெட்டிக்கொல்லப்பட்ட பா.ஜனதா தொண்டரின் தாயாரின் வங்கி கணக்கில் நிவாரண நிதி குவிந்த வண்ணம் உள்ளது. கடந்த 3 நாட்களில் ரூ.24 லட்சம் நிதி சேர்ந்துள்ளது.
மங்களூரு,

பா.ஜனதா தொண்டர் கொலை
தட்சிணகன்னடா மாவட்டம் மங்களூரு அருகே காட்டிபள்ளா பகுதியை சேர்ந்தவர் தீபக் ராவ் என்கிற தீபு (வயது 22). பா.ஜனதா தொண்டரான இவர் தனியார் செல்போன் நிறுவனத்தில் ‘சிம்கார்டு‘ விற்பனை செய்யும் பிரதிநிதியாக வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த 3-ந்தேதி மதியம் தனது மோட்டார் சைக்கிளில் சூரத்கல்லில் இருந்து கிருஷ்ணாபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை காரில் வந்த 4 பேர் கும்பல் வழிமறித்தனர்.
பின்னர் அவரது கண்ணில் மிளகாய் பொடி தூவிய மர்மநபர்கள், பயங்கர ஆயுதங்களால் அவரை வெட்டி படுகொலை செய்தனர். இந்த கொலை சம்பவம் பற்றி சூரத்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரை கைது செய்துள்ளனர். தீபக் ராவ் ஏழ்மை குடும்பத்தை சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. கொலையான தீபக் ராவ் சம்பாதித்து தான் அவரது குடும்பம் வாழ்க்கை நடத்தி வந்ததாக தெரிகிறது.
குவியும் நிவாரண நிதி
இதுபற்றியும், தீபக் ராவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு நிவாரண நிதி உதவி வழங்கும்படியும் கூறி, தீபக் ராவின் தாய் பிரேமாவதியின் வங்கி கணக்கு எண் ஆகியவற்றுடன் வாட்ஸ்-அப், பேஸ்புக் (முகநூல்), டுவிட்டர் உள்ளிட்ட சமூகவலைத் தளங்களில் வேகமாக தகவல் கள் பரவின.
இந்த நிலையில் நேற்று முன்தினம் வரை பிரேமாவதியின் வங்கி கணக்கில் ரூ.17 லட்சத்து 43 ஆயிரத்து 850 நிவாரண நிதியாக குவிந்தது. நேற்றும் சிலர் நிவாரண உதவி வழங்கியுள்ளனர். நேற்று ஒரே நாளில் சுமார் ரூ.7 லட்சம் பிரேமாவதியின் வங்கி கணக்கில் பல்வேறு நபர்கள் செலுத்தியுள்ளனர்.
இதுபற்றி தீபக் ராவின் சகோதரர் கூறுகையில், ‘எனது தாயின் வங்கி கணக்கில் கடந்த 3 நாட்களில் சுமார் ரூ.24 லட்சம் நிவாரண உதவியாக பல்வேறு நபர்கள் செலுத்தியுள்ளனர்’ என்றார்.

Related Tags :
Next Story