மகதாயி நதிநீர் பங்கீட்டு பிரச்சினையில் கோவா முதல்-மந்திரி இரட்டை வேடம் போடுகிறார்
மகதாயி நதிநீர் பங்கீட்டு பிரச்சினையில் கோவா முதல்-மந்திரி மனோகர் பாரிக்கர் இரட்டை வேடம் போடுவதாக மந்திரி எம்.பி.பட்டீல் குற்றச்சாட்டு கூறியுள்ளார்.
பெங்களூரு,

மகதாயி நதிநீர் பிரச்சினை
கர்நாடகம், கோவா, மராட்டிய மாநிலங்களுக்கு இடையே மகதாயி நதிநீரை பங்கீட்டு கொள்வது தொடர்பாக பிரச்சினை இருந்து வருகிறது. இந்த பிரச்சினை தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியை, கோவா முதல்-மந்திரி மனோகர் பாரிக்கர் சந்தித்து பேச இருப்பதாக தகவல் வெளியானது.
இதுகுறித்து மந்திரி எம்.பி.பட்டீலிடம் நேற்று நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-
இரட்டை வேடம் போடுகிறார்
மகதாயி நதிநீர் பங்கீட்டு பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க கர்நாடக அரசு தயாராக உள்ளது. வடகர்நாடக மாவட்டங்களில் நிலவும் குடிநீர் பிரச்சினையை தீர்க்க பேச்சுவார்த்தை நடத்த தயார் என்று பா.ஜனதா மாநில தலைவர் எடியூரப்பாவுக்கு கோவா முதல்-மந்திரி மனோகர் பாரிக்கர் கடிதம் எழுதி இருந்தார். நியாயமாக அவர், முதல்-மந்திரி சித்தராமையாவுக்கு தான் கடிதம் எழுதி இருக்க வேண்டும். ஆனால் எடியூரப்பாவுக்கு கடிதம் எழுதி அனுப்பியது ஏன்? என்பது தெரியவில்லை. இதன்மூலமாகவே மகதாயி நதிநீர் பிரச்சினையில் பா.ஜனதா நாடகமாடுவதை வடகர்நாடக மக்கள் புரிந்து கொண்டனர்.
மகதாயி நதிநீர் பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டும் என்பதற்காக முதல்-மந்திரி சித்தராமையா, மனோகர் பாரிக்கருக்கு கடிதம் எழுதினார். பேச்சுவார்த்தை நடத்த சித்தராமையாவும் தயாராக இருந்தார். ஆனால் சித்தராமையா எழுதிய கடிதத்திற்கு, இதுவரை மனோகர் பாரிக்கரிடம் இருந்து எந்த பதில் கடிதமும் வரவில்லை. மகதாயி நதிநீர் பங்கீட்டு பிரச்சினையில் மனோகர் பாரிக்கர் இரட்டை வேடம் போடுகிறார். இந்த பிரச்சினை தொடர்பாக அவர், பிரதமரை சந்தித்து பேசட்டும். விரைவில் பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டும். வடகர்நாடக மக்களுக்கும், விவசாயிகளுக்கும் நல்லது நடக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story