சிறுமியை கற்பழித்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு


சிறுமியை கற்பழித்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 7 Jan 2018 3:45 AM IST (Updated: 7 Jan 2018 3:43 AM IST)
t-max-icont-min-icon

சிறுமியை கற்பழித்து வந்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு கூறி உள்ளது.

மும்பை,

சிறுமியை கற்பழித்து வந்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு கூறி உள்ளது.

சிறுமி கற்பழிப்பு

மும்பை சிவ்ரியை சேர்ந்த மைனர் பெண் (வயது18) பெற்றோருடன் வசித்து வருகிறாள். இவரது பக்கத்து வீட்டில் வசித்து வந்த 30 வயது வாலிபர் ஒருவர் கடந்த 2011–ம் ஆண்டு முதல் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி மைனர் பெண்ணை கற்பழித்து வந்தார். மேலும் இதை வெளியே கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டினார். இதனால் மைனர்பெண் இதுகுறித்து யாரிடமும் தெரிவிக்காமல் இருந்து வந்து உள்ளார். இதனை பயன்படுத்தி வாலிபர் கடந்த 4 ஆண்டாக அவளை பல இடங்களுக்கு அழைத்து சென்று கற்பழித்து உள்ளார்.

10 ஆண்டு சிறை

இந்தநிலையில் மைனர்பெண் தன்னை திருமணம் செய்யும் படி வாலிபரை வலியுறுத்தினார். இதனால் ஆத்திரமடைந்த அவர் மைனர்பெண்ணை பெல்ட்டால் தாக்கி உள்ளார். காயமடைந்த அவள் தனக்கு நேர்ந்த அவலம் குறித்து பெற்றோரிடம் தெரிவித்தார். இதனை தொடர்ந்து பெற்றோர் ஆர்.ஏ.கே மார்க் போலீசில் புகார் அளித்தனர். இதன்படி போலீசார் வழக்கு பதிவு செய்து வாலிபரை கைது செய்தனர். மேலும் சிறப்பு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணை நிறைவடைந்து நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் மைனர் பெண்ணை கற்பழித்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி ரேகா பண்டாரே தீர்ப்பு கூறினார்.


Next Story