‘மின்சார’ பெண்கள்


‘மின்சார’ பெண்கள்
x
தினத்தந்தி 7 Jan 2018 2:30 PM IST (Updated: 7 Jan 2018 11:42 AM IST)
t-max-icont-min-icon

பெண்கள் இயக்கும் மின்சார கால் டாக்சி ஐதராபாத்தில் இயக்கப்பட உள்ளது. இதற்கான ஆரம்பகட்ட பணிகள் தொடங்கியுள்ளன. முதலில் சோதனை அடிப்படையில் சில கால் டாக்சிகளை ஓட்டுவதற்கு பெண் களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

 நாளடைவில் மின்சார கால் டாக்சிகளின் எண்ணிக்கையை 50 ஆக உயர்த்த முடிவு செய்திருக்கிறார்கள். இதற்கான முயற்சியில் பெண் தொழில் முனைவோர் சங்கம் ஈடுபட்டுள்ளது. அதன் தலைவர் ரமா தேவி கூறுகையில், ‘‘பெண்களுக்கு தொழில் வாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில் முழுக்க, முழுக்க பெண்களே கார்களை இயக்கவும், நிர்வகிக்கவும் வாய்ப்பு தருகிறோம். இதற்காக கார் ஓட்டும் பெண்களுக்கு ஓட்டுநர் பயிற்சிக்கும், நிதி வசதிக்கும் ஏற்பாடு செய்திருக்கிறோம். பெண்களின் பாதுகாப்பு விஷயத்துக்கும் முக்கியத்துவம் கொடுப்போம்’’ என்கிறார். மின்சார கார்களை இயக்குவதில் முக்கியமான சிக்கல் ஒன்றும் இருக்கிறது. வாகனங்களில் பெட்ரோல், டீசல் நிரப்பு வதற்காக ஆங்காங்கே அமைக்கப் பட்டிருக்கும் பங்குகளை போல மின்சார கார்களை சார்ஜ் செய்வதற்கும் வசதி ஏற்படுத்தப்பட வேண்டும். அந்த முயற்சியிலும் பெண் தொழில் முனைவோர் சங்கம் ஈடுபட்டுள்ளது.

‘‘குறிப்பிட்ட தூர இடைவெளியில் கார் களுக்கு சார்ஜ் செய்ய வேண்டியிருக்கும். அதற்காக முக்கிய பகுதிகளில் கார்களுக்கு சார்ஜிங் ஸ்டேசன்களை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம்’’ என்றார் ரமா தேவி.

Next Story