திருப்பத்தூரில், சாலையில் தோண்டப்பட்ட குழிகள் ஒரு வாரமாகியும் மூடப்படாத நிலை வாகன ஓட்டிகள் அவதி
திருப்பத்தூரில் உள்ள புதுககோட்டை–காரைககுடி இணைப்பு சாலையில் குடிநீர் குழாய் பழுதை சரிசெய்வதற்காக தோண்டப்பட்ட குழிகள் ஒருவாரமாகியும் மூடப்படாததால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.
திருப்பத்தூர்,
திருப்பத்தூர் பேரூராட்சிக்குட்பட்ட சீதளி கீழ் தெரு என்ற கறிககடைககார தெரு வழியாக புதுககோட்டை–காரைககுடி இணைப்பு சாலை செல்கிறது. இந்த சாலை கடந்த 2013–14–ம் ஆண்டிற்கான ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சி திட்டத்தின்கீழ் அமைக்கப்பட்டது. தற்போது இந்த சாலையில் தினசரி ஆயிரத்திற்கு மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. மேலும் போக்குவரத்துக்கு முக்கிய சாலையாக இது இருப்பதால் புதுக்கோட்டை, திருச்சி பகுதிகளில் இருந்து வருவோர், இந்த சாலை வழியாக திருப்பத்தூர் வந்து, பின்னர் அங்கிருந்து மதுரை சென்று வருகின்றனர். மேலும் இந்த சாலை நகரில் போககுவரத்து நெரிசல் மற்றும் வாகன ஓட்டிகளின் சிரமத்தை குறைககும் வகையில் உள்ளது. தற்போது அந்த சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது.
இந்தநிலையில், கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு புதுத்தெரு பகுதியில் தடுப்புச்சுவர் கட்டும்பணியின்போது அவ்வழியாக செல்லும் காவிரி கூட்டுக்குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகியது. இதனையடுத்து குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டு, நகரில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து குடிநீர் குழாயை சரிசெய்ய புதுக்கோட்டை–காரைக்குடி சாலையிலும், அதன் ஓரத்திலும் குழிகள் தோண்டப்பட்டன. ஆனால் அதிகாரிகள் குடிநீர் குழாயை மட்டும் சரிசெய்துவிட்டு, குழிகளை மூடவில்லை. இதனால் இந்த சாலை வழியாக வரவேண்டிய வாகனங்கள் நான்கு ரோடு சுற்றி செல்கின்றன. இத்துடன் நகரில் கடும் போககுவரத்து நெரிசல் ஏற்படுவதோடு வாகன ஓட்டிகளும், பொதுமககளும் மிகவும் அவதிககுள்ளாகி வருகின்றனர். எனவே இந்த சாலையில் குடிநீர் குழாயை சரிசெய்ய தோண்டப்பட்ட குழிகளை மூடி சாலையை பயன்பாட்டிற்கு கொண்டுவர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.