அரியலூர் மாவட்டத்தில் போக்குவரத்துக்கழக ஊழியர்கள் 4-வது நாளாக வேலைநிறுத்தம்
அரியலூர் மாவட்டத்தில் போக்குவரத்துக்கழக ஊழியர்கள் 4-வது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ரெயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
அரியலூர்,
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்களுக்கு அடிப்படை சம்பளத்தில் இருந்து 2.57 சதவீத ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்கிற போக்குவரத்து கழக தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் வைத்த கோரிக்கையை அதிகாரிகள் ஏற்காததால் சென்னையில் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனால் கடந்த 4-ந்தேதி இரவிலிருந்து தமிழகம் முழுவதும் அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் நேற்று அரியலூர் கல்லங்குறிச்சி சாலையில் உள்ள போக்குவரத்துக்கழக கிளை பணிமனையில் பணியாற்றும் டிரைவர், கண்டக்டர்கள் 4-வது நாளாக வேலைநிறுத்தத்தை தொடர்ந்தனர். இதனால் தினசரி கூலி அடிப்படையில் கனரக வாகனங்களை ஓட்டி வருபவர்கள், கல்விநிறுவன டிரைவர்கள் உள்ளிட்டோரை வைத்து அரசு புறநகர் பஸ்கள், நகர பஸ்களை பணிமனை நிர்வாக அதிகாரிகள் இயக்கினர்.
அரியலூர் பணிமனையில் இருந்த 86 பஸ்களில் 70 பஸ்கள் இயங்கின. தஞ்சை, திருச்சி, கும்பகோணம், பெரம்பலூர், திட்டக்குடி உள்ளிட்ட இடங்களுக்கும் பஸ் போக்குவரத்து நடந்தது. இதைத்தவிர தனியார் பஸ்கள், மினிபஸ்கள், அரசு நகர பஸ்கள் உள்ளிட்டவையும் கிராம பகுதிகளுக்கு இயங்கின. மேலும் விடுமுறை தினம் என்பதால் பள்ளி மாணவ, மாணவிகள், அரசு வேலைக்கு செல்பவர்கள் இல்லாததால் பஸ் நிலையத்தில் பயணிகள் குறைவாகவே காணப்பட்டனர்.
4-வது நாளாக நேற்று அரியலூர் ரெயில் நிலையத்தில் அரியலூர்-சென்னை வழித்தடத்தில் சென்ற ரெயில்களிலும், அரியலூர்-நெல்லை வழித்தடத்தில் சென்ற ரெயில்களிலும் முன்பதிவில்லாமல் பயணம் செய்யும் மக்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. இதைத்தவிர கடலூர், மதுரை, விழுப்புரம் உள்ளிட்ட பயணிகள் ரெயில்களிலும் கூட்டம் அலைமோதியது. கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக அரியலூர் ரெயில்வே போலீசார், ரெயில் நிலையத்தில் ஆங்காங்கே ரோந்து பணியில் ஈடுபட்டு தீவிரமாக கண்காணித்தனர்.
ஜெயங்கொண்டம் கிளை பணிமனையில் இருந்து 75 சதவீத நகர மற்றும் புறநகர் பஸ்கள் இயக்கப்பட்டன. மேலும் மாற்று டிரைவர்கள் மூலம் பஸ்சை எடுத்து ஓட்டுவதற்கான பணிகளை மும்முரமாக செய்து வருகின்றனர். மாற்று டிரைவர்கள் வைத்து இயக்கப்பட்ட பஸ்களில் தற்காலிக கண்டக்டர்கள் மஞ்சப்பை வைத்து கொண்டு பயணிகளிடம் டிக்கெட் பணத்தை பெற்றது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story