தடுப்பணையில் தவறி விழுந்து புதுமாப்பிள்ளை உள்பட 2 பேர் பலி
குடியாத்தம் அருகே ஜிட்டப்பள்ளி தடுப்பணையில் தவறி விழுந்து புதுமாப்பிள்ளை உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
குடியாத்தம்,
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே சீவூர் ஊராட்சி லட்சுமணாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சின்னதுரை. இவரது மகன் ஆனந்தன் (வயது 24), கூலி தொழிலாளி. இதே பகுதியை சேர்ந்த வெங்கடேசன் என்பவரின் மகன் அருண்குமார் (24), தச்சு தொழிலாளி. அருண்குமாருக்கு கவுதமி என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு திருமணமாகி 4 மாதங்கள் ஆகிறது. ஆனந்தனும், அருண்குமாரும் நண்பர்கள்.
குடியாத்தம் அருகே மோர்தானா அணையில் இருந்து வெளியேறும் தண்ணீர் ஜிட்டப்பல்லியில் உள்ள தடுப்பணை பகுதியில் இருந்து வலது, இடது கால்வாய் வழியாக செல்கிறது. இந்த ஜிட்டப்பல்லி தடுப்பணை சுமார் 20 அடி ஆழம் கொண்டது. தற்போது தடுப்பணையில் தண்ணீர் நிரம்பி உள்ளது.
இந்த நிலையில் நேற்று மதியம் ஆனந்தனும், அருண்குமாரும் மோட்டார் சைக்கிளில் ஜிட்டப்பல்லி தடுப்பணைக்கு சென்றுள்ளனர். அவர்கள் இருவரும் மீன் பிடிப்பதற்காக தூண்டில் வலையுடன் தடுப்பணையில் தண்ணீர் வழிந்து செல்லும் கரைமீது நடந்து சென்றனர். கரை படிந்துள்ள பாசி மீது நடந்து சென்றபோது கால்வழுக்கி ஒருவர்பின் ஒருவராக இருவரும் தண்ணீருக்குள் விழுந்தனர். அவர்களது கூச்சல் சத்தம்கேட்டு அருகே ஆடு மேய்த்து கொண்டிருந்த பெண் ஒருவர் கிராம மக்களிடம் தகவல் தெரிவித்துள்ளார்.
கிராம மக்கள் தடுப்பணைக்கு சென்று பார்த்தபோது அவர்கள் தண்ணீரில் மூழ்கியது தெரிய வந்தது. இது குறித்து அவர்கள் குடியாத்தம் தீயணைப்பு துறையினருக்கும், காவல்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் பிரபு, செல்வம், தனிப்பிரிவு ஏட்டு ஜெயக்குமார், கிராம நிர்வாக அலுவலர் சசிகுமார் மற்றும் தீயணைப்பு நிலைய அலுவலர் சிதம்பரம் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்றனர்.
சேறும், சகதியுமாக இருந்த தடுப்பணையில் இறங்கிய தீயணைப்பு வீரர்கள் சுமார் 3 மணி நேரம் போராடி ஆனந்தன், அருண்குமார் ஆகியோரது பிணங்களை மீட்டனர்.
இது குறித்து குடியாத்தம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தடுப்பணையில் 2 பேர் மூழ்கி பலியான சம்பவத்தால் லட்சுமணாபுரம் கிராமமே சோகத்தில் மூழ்கி உள்ளது.

Related Tags :
Next Story