கையகப்படுத்திய 3,400 ஏக்கர் நிலத்தை விவசாயிகளிடமே திருப்பி வழங்க வேண்டும்
சிறப்பு பொருளாதார திட்டத்திற்காக விவசாயிகள் வழங்கிய 3,400 ஏக்கர் நிலத்தை அரசே கையகப்படுத்தி விவசாயிகளிடமே திருப்பி வழங்கவேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.
பெரம்பலூர்,
பெரம்பலூர் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட 7-வது மாநாடு தீரன் நகரில் நடந்தது. பிரதிநிதிகள் மாநாட்டிற்கு மாவட்ட செயலாளர் ஞானசேகரன் தலைமை தாங்கினார். மாநாடு வரவேற்பு குழு செயலாளர் தியாகராஜன் வரவேற்றார். மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் சிவபுண்ணியம், மாநில செயற்குழு உறுப்பினர் திருத்துறைபூண்டி பழனிசாமி ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். கூட்டத்தில் லாடபுரம் அருகே ஆனைக்கட்டி அருவி நீரை மறித்து பச்சைமலையின் குறுக்கே நீர்த்தேக்கம் கட்டவேண்டும். திருமாந்துறை, பென்னக்கோணம், எறையூர் ஊராட்சி பகுதிகளில் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்கும் திட்டத்திற்காக விவசாயிகள் வழங்கிய 3,400 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு பல ஆண்டுகள் ஆகியும் திட்டத்தை தொடங்காததால், அந்த நிலத்தை அரசே மீண்டும் கையகப்படுத்தி நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு தலா 2 ஏக்கர் நிலம் வழங்க வேண்டும்.
வேப்பந்தட்டை தாலுகா மலையாளப்பட்டி அருகே சின்னமுட்டுலு பகுதியில் கல்லாற்றின் குறுக்கே அணை கட்டும் திட்ட ஆய்வு பணியை விரைந்து முடித்து அணைகட்டுமான பணிகளை உடனே தொடங்க வேண்டும். அரசு மருத்துவக்கல்லூரி அமைப்பதற்கு போதிய அளவு நிலம் தனியார் அறக்கட்டளை மூலம் வழங்கப்பட்டும் அரசு மருத்துவக்கல்லூரி கட்டும் திட்டம் கிடப்பில் வைக்கப்பட்டுள்ளது. இனியும் காலம் கடத்தாமல் உடனே அரசு மருத்துவக்கல்லூரியை அமைக்க வேண்டும்.
பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் சுற்றிலும் வணிக வளாகங்கள் கட்டப்பட்டுள்ளதால் பஸ்கள் நின்று செல்ல வழியில்லாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பயணிகளும் வெகுவாக பாதிக்கப்படுவதால், புதிதாக ஒரு புறநகர் பஸ் நிலையம் கட்டவேண்டும். கிருஷ்ணாபுரம், வெண்பாவூர் பகுதியில் கல்லாற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டி நீரை தேக்கி பாசனத்திற்கு பயன்பட வழிவகை செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்தவேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் அரியலூர் மாவட்ட செயலாளர் உலகநாதன், மாவட்ட பொருளாளர் ஜெயராமன், மாவட்டக்குழு மகேஸ்வரி மற்றும் மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஒன்றிய செயலாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் வரவேற்பு குழுஉறுப்பினர் ரெங்கராஜ் நன்றி கூறினார்.

Related Tags :
Next Story