தூத்துக்குடியில் ஒரு கட்டு கரும்பு ரூ.350–க்கு விற்பனை பொங்கல் பண்டிகை களைகட்ட தொடங்கியது


தூத்துக்குடியில் ஒரு கட்டு கரும்பு ரூ.350–க்கு விற்பனை பொங்கல் பண்டிகை களைகட்ட தொடங்கியது
x
தினத்தந்தி 8 Jan 2018 2:45 AM IST (Updated: 8 Jan 2018 12:38 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் பொங்கல் பண்டிகையை களை கட்ட தொடங்கியுள்ளது. இப்பண்டிகையை முன்னிட்டு மார்க்கெட் பகுதியில் கரும்புகள் குவித்து வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.

தூத்துக்குடி,

தூத்துக்குடியில் பொங்கல் பண்டிகையை களை கட்ட தொடங்கியுள்ளது. இப்பண்டிகையை முன்னிட்டு மார்க்கெட் பகுதியில் கரும்புகள் குவித்து வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. நேற்று ஒரு கட்டு கரும்பு ரூ.350–க்கு விற்பனை செய்யப்பட்டது.

பொங்கல் பண்டிகை

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வருகிற 14–ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. அன்று மக்கள் வீடுகள் தோறும் பொங்கல் வைத்து வழிபாடு செய்வார்கள். அப்போது கரும்பு உள்ளிட்ட பொருட்களை சாமிக்கு படைத்து வழிபடுவார்கள். அதே நேரத்தில் புதுமண தம்பதிகளுக்கு பெண் வீட்டார் பொங்கல்படியாக கரும்பு, வாழைத்தார் போன்றவற்றை கொடுப்பது வழக்கம்.

கரும்பு விற்பனை

இதனால் மக்கள் தற்போது இருந்தே கரும்பு கட்டுகளை வாங்க தொடங்கி உள்ளனர். இதற்கு ஏற்ப தூத்துக்குடி மார்க்கெட் பகுதியில் கரும்பு கட்டுகள் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டு உள்ளன. மதுரை, தேனி உள்ளிட்ட இடங்களில் இருந்து கரும்பு கொண்டு வரப்பட்டு உள்ளது. நேற்று ஒரு கட்டு கரும்பு ரூ.350–க்கு விற்பனை செய்யப்பட்டது.

இது குறித்து கரும்பு வியாபாரி கூறும் போது, ‘கரும்பு தேனி மற்றும் சுற்று வட்டாரங்களில் இருந்து கொண்டு வரப்படுகிறது. இந்த ஆண்டு கரும்பு விளைச்சல் குறைவாக இருப்பதால், விலை தொடர்ந்து உயரும் வாய்ப்பு உள்ளது’ என்று கூறினார்.


Next Story