அரசு போக்குவரத்து பணிமனையில் ஆலோசனை கூட்டம் கலெக்டர் ராமன் பங்கேற்பு
திருப்பத்தூரில் அரசு போக்குவரத்து பணிமனையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் கலந்து கொண்டார்.
திருப்பத்தூர்,
அரசு போக்குவரத்து துறை தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்த தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அரசு பஸ்கள் குறைந்த அளவு மட்டுமே இயக்கப்படுகிறது. திருப்பத்தூரில் பஸ் கண்ணாடி உடைக்கப்பட்டு, டிரைவர், கண்டக்டர் மீது தாக்குதல் நடைபெற்றது.
இதனை அறிந்த வேலூர் மாவட்ட கலெக்டர் ராமன் நேற்று முன்தினம் இரவு திருப்பத்தூர் அரசு பணிமனையில் ஆய்வு செய்தார்.
பின்னர் கலெக்டர் ராமன், திருப்பத்தூர் சப்-கலெக்டர் கார்த்திகேயன் ஆகியோர் தலைமையில், திருப்பத்தூர் போக்குவரத்து பணிமனையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
வேலூர் மண்டல மேலாளர் கலைச்செல்வன், பணிமனை மேலாளர்கள் குமரன், மயில்வாகனம், மாவட்ட அண்ணா தொழிற்சங்க மண்டல செயலாளர் மகேந்திரன், திருப்பத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பஸ்களை பாதுகாப்பாக இயக்குவது எப்படி?, புதிய ஒப்பந்த தொழிலாளர்களை நியமிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
பின்னர் கலெக்டர் ராமன் நிருபர்களிடம் கூறியதாவது:-
பஸ்கள் 60 சதவீதம் வரை இயக்கப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு தேவையான அளவு பஸ்கள் இயக்கப்படும். பாதுகாப்புக்காக பஸ்சிற்கு முன்பு 2 போலீசார் சென்று மெயின்ரோடு வரை விட்டுவிட்டு வர ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
வட்டார போக்குவரத்து அலுவலர் மூலம் கனரக வாகன உரிமம் எடுத்த டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் தற்காலிக ஊழியர்களாக தினக்கூலி அடிப்படையில் பணிபுரிய முன்னுரிமை அளிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story