சரக்கு வேன்-மோட்டார்சைக்கிள் மோதல்; 2 பேர் படுகாயம்
திருக்காட்டுப்பள்ளியில் சரக்கு வேனும், மோட்டார்சைக்கிளும் மோதியது. இந்த விபத்தில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
திருக்காட்டுப்பள்ளி,
தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள கீழப்புதகிரி அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ரஜினி (வயது45). விவசாய தொழிலாளி. சம்பவத்தன்று இவர் தனது நண்பர் ராபின்குமார்(24) என்பவருடன் மோட்டார்சைக்கிளில் திருக்காட்டுப்பள்ளி காவிரி கரை பகுதியில் சென்று கொண்டிருந்தார். ராபின்குமார் மோட்டார்சைக்கிளை ஓட்டினார்.
அப்போது அங்கு உள்ள வளைவில் திரும்பிய போது எதிரே வந்த சரக்கு வேன் எதிர்பாராதவிதமாக மோட்டார்சைக்கிள் மீது மோதியது.
இந்த விபத்தில் ரஜினி, ராபின்குமார் ஆகிய 2 பேரும் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து இருவரும் திருக்காட்டுப் பள்ளி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட னர்.
விசாரணை
பின்னர் இருவரும் மேல்சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து திருக்காட்டுப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Tags :
Next Story