கும்பகோணம் போக்குவரத்து கோட்டத்தில் 9 ஆயிரம் தொழிலாளர்களுக்கு நோட்டீஸ்
கும்பகோணம் கோட்ட அரசு போக்குவரத்து கழகத்தில் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் 9 ஆயிரம் தொழிலாளர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
தஞ்சாவூர்,
ஊதிய உயர்வு கோரிக்கையை வலியுறுத்தி தமிழக அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, கும்பகோணம் கோட்ட அரசு போக்குவரத்துக்கழக கட்டுப்பாட்டில் கும்பகோணம், நாகை, புதுக்கோட்டை, கரூர், திருச்சி, காரைக்குடி ஆகிய 6 மண்டலங்கள் உள்ளன. இந்த 6 மண்டலங்களிலும் பஸ் தொழிலாளர்கள் 4-வது நாளாக நேற்றும் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே, வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு மாற்றாக தற்காலிகமாக டிரைவர்கள், கண்டக்டர்கள் நியமிக்கப்பட்டு பஸ்களை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்தநிலையில் சென்னை ஐகோர்ட்டு உத்தரவை ஏற்று உடனடியாக பணிக்கு திரும்புமாறு போக்குவரத்து கழகம் தொழிலாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
கும்பகோணம்- நாகை மண்டலம்
ஆனால் அதை பொருட்படுத்தாமல் கோரிக்கையை வலியுறுத்தி தொடர்ந்து வேலைநிறுத்த போராட்டத்தில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். கும்பகோணம் மண்டலத்தில் 10 அரசு போக்குவரத்து பணிமனைகள் உள்ளன. நாகை மண்டலத்தில் 11 அரசு போக்குவரத்து பணிமனைகள் உள்ளன. கும்பகோணம், நாகை மண்டலத்தில் போராட்டத்தில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. அதில், முன் அறிவிப்பின்றி பணிக்கு ஏன் வரவில்லை? என்பன உள்ளிட்ட கேள்விகள் கேட்கப்பட்டு அதற்கு 7 நாட்களுக்குள் விளக்கம் அளிக்குமாறு கூறப்பட்டுள்ளது.
9 ஆயிரம் பேருக்கு நோட்டீஸ்
கும்பகோணம் மண்டலத்தில் அரசு பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள் என மொத்தம் 3 ஆயிரத்து 200 பேர் உள்ளனர். இதில் பணிக்கு வராத 1,400 பேருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. இதே போல் நாகை மண்டலத்தில் அரசு பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள் என மொத்தம் 4 ஆயிரம் பேர் உள்ளனர். இதில் பணிக்கு வராத 2,600 பேருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.
இதே போல் திருச்சி, கரூர், புதுக்கோட்டை காரைக்குடி ஆகிய மண்டலங்களிலும் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. இந்த 6 மண்டலங்களிலும் மொத்தம் 9 ஆயிரம் தொழிலாளர்களுக்கு இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. இந்த நோட்டீஸ் சம்பந்தப்பட்ட போக்குவரத்து கழக பணிமனைகள் மூலம் வழங்கப்பட்டு உள்ளது.

Related Tags :
Next Story