சிறைக்கு சென்று வந்தவர் என்று உண்மையை சொன்னால் எடியூரப்பாவுக்கு கோபம் வருகிறது சித்தராமையா பேட்டி
சிறைக்கு சென்று வந்தவர் என்று உண்மையை சொன்னால் எடியூரப்பாவுக்கு கோபம் வருகிறது என்று முதல்-மந்திரி சித்தராமையா கூறினார்.
சிவமொக்கா,

சித்தராமையா பேட்டி
முதல்-மந்திரி சித்தராமையா நேற்று முன்தினம் ஒருநாள் சுற்றுப்பயணமாக சிவமொக்கா மாவட்டத்திற்கு வருகை தந்தார். அங்கு அவர் பல்வேறு வளர்ச்சி பணிகளை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். இந்த நிலையில் மாலையில் சிவமொக்காவில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கர்நாடகத்தில் முதல்-மந்திரியாக 5 ஆண்டுகால ஆட்சியை நிறைவு செய்ய உள்ளது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. மக்கள் அளித்த வாக்குகள் அவர்கள் மீது அதிகாரத்தை செலுத்துவதற்காக அல்ல, அது அவர்களுக்கு தொண்டாற்றுவதற்கான வாய்ப்பாக கருதுகிறேன். காங்கிரஸ் கட்சியினர் அரசு நிதியில் கட்சி கூட்டத்தை நடத்துவதாக எதிர்க்கட்சியினர் கூறுகின்றனர். அவர்கள் வீட்டில் இருந்து கொண்டுவந்த பணத்திலா? நாங்கள் கட்சி கூட்டத்தை நடத்துகிறோம்.
கோபம் வருகிறது
பா.ஜனதா எப்படியாவது ஆட்சியை பிடித்து விடும் என்றும், நாம் முதல்-மந்திரி ஆகிவிடலாம் என்றும் எடியூரப்பா கனவு கண்டு வருகிறார். அவரின் கனவு ஒருபோதும் பலிக்காது.
அவர் ஊழல் செய்து சிறைக்கு சென்று வந்தவர். மக்கள் அவரை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். எடியூரப்பா சிறைக்கு சென்று வந்தவர் என்று சொன்னால் அவருக்கு கோபம் வருகிறது. நான் ஒன்றும் பொய் சொல்லவில்லையே? உண்மையை தானே சொல்கிறேன். பொய்யை மட்டுமே பேசி வரும் எடியூரப்பாவுக்கு, உண்மையை சொன்னால் கோபம் வருகிறது.
இவ்வாறு முதல்-மந்திரி சித்தராமையா கூறினார்.

Related Tags :
Next Story