கல்பாக்கம் அணு மின்நிலைய அதிகாரி வீட்டில் 17 பவுன் நகை மாயம்


கல்பாக்கம் அணு மின்நிலைய அதிகாரி வீட்டில் 17 பவுன் நகை மாயம்
x
தினத்தந்தி 8 Jan 2018 3:45 AM IST (Updated: 8 Jan 2018 2:54 AM IST)
t-max-icont-min-icon

கல்பாக்கம் அணு மின்நிலைய அதிகாரி வீட்டில் 17 பவுன் மாயம் ஆனது. இது குறித்து அந்த வீட்டின் வேலைக்கார பெண் மீது புகார் செய்யப்பட்டுள்ளது.

கல்பாக்கம்,

கல்பாக்கம் அணுசக்திதுறை ஊழியர் குடியிருப்பில் வசித்து வருபவர் ரமேஷ்குமார் (வயது 51) இவர் கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் அறிவியல் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் காலை அவர் பணிக்கு வழக்கம் போல சென்றார். வீட்டில் கண் பார்வை குறைவான அவரது தாயாரும், வேலைக்கார பெண்ணும் இருந்தனர். மாலை பணி முடிந்து வீடு திரும்பிய ரமேஷ்குமார் தனது வீட்டில் இருந்த பீரோவை திறந்து பார்த்தார்.

அப்போது அதில் வைக்கப்பட்டிருந்த 17 பவுன் நகையை காணவில்லை.

வீட்டு வேலைக்கார பெண்ணும் மாயமாகி இருந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் வீட்டில் இருந்த நகை மாயமானது குறித்து வேலைக்கார பெண் மீது கல்பாக்கம் போலீஸ்நிலையத்தில் புகார் செய்தார்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story