வர்ஷா கெய்க்வாட் எம்.எல்.ஏ. முயற்சியால் தாராவி– மாகிம் ஆகாய நடைபாதை பணிக்கு ரூ.15 கோடி ஒதுக்கீடு


வர்ஷா கெய்க்வாட் எம்.எல்.ஏ. முயற்சியால் தாராவி– மாகிம் ஆகாய நடைபாதை பணிக்கு ரூ.15 கோடி ஒதுக்கீடு
x
தினத்தந்தி 8 Jan 2018 4:00 AM IST (Updated: 8 Jan 2018 3:12 AM IST)
t-max-icont-min-icon

வர்ஷா கெய்க்வாட் எம்.எல்.ஏ. முயற்சியால், தாராவி– மாகிம் ஆகாய நடைபாதை பணிக்கு ரூ.15 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. ஆகாய நடைபாதை ஆசியாவின் மிகப்பெரிய குடிசை பகுதியான தாராவியில் லட்சக்கணக்கானோர் வசித்து வருகிறார்கள். இங்கு வசித்து வருபவர்கள் வேலைக்கு

மும்பை,

வர்ஷா கெய்க்வாட் எம்.எல்.ஏ. முயற்சியால், தாராவி– மாகிம் ஆகாய நடைபாதை பணிக்கு ரூ.15 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

ஆகாய நடைபாதை

ஆசியாவின் மிகப்பெரிய குடிசை பகுதியான தாராவியில் லட்சக்கணக்கானோர் வசித்து வருகிறார்கள். இங்கு வசித்து வருபவர்கள் வேலைக்கு செல்வது உள்ளிட்ட போக்குவரத்து தேவைகளுக்காக அருகில் உள்ள மாகிம் ரெயில் நிலையத்திற்கு வந்து செல்கிறார்கள்.

இவர்களின் வசதிக்காகவும், அங்குள்ள சாலையில் திரளும் கூட்டம் காரணமாக ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும் மராட்டிய மாநில வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு ஆணையமான மகாடா தாராவியில் இருந்து மாகிம் கிழக்கு ரெயில் நிலையம் வரை ஆகாய நடைபாதை அமைக்கும் பணியை மேற்கொண்டது.

ரூ.15 கோடி ஒதுக்கீடு

பாதி தூரம் வரை அமைக்கப்பட்ட நிலையில், இந்த ஆகாய நடைபாதை பணி நிதிபற்றாக்குறை காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக கிடப்பில் போடப்பட்டு உள்ளது. பணியை முடிப்பதற்கு கூடுதலாக ரூ.20 கோடி தேவைப்படுவதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது.

இந்தநிலையில், தாராவி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஆகாய நடைபாதை பணியை விரைந்து முடிக்கும்படி முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் மகாடா அதிகாரிகளை சந்தித்து வலியுறுத்தி வந்தார்.

இந்தநிலையில், தாராவி– மாகிம் ஆகாய நடைபாதை பணியை முடிப்பதற்கு மாநில அரசு ரூ.15 கோடி நிதி ஒதுக்கி உள்ளது. இதையடுத்து கிடப்பில் போடப்பட்டு இருந்த ஆகாய நடைபாதை பணிகள் விரைவில் தொடங்க உள்ளதாக வர்ஷா கெய்க்வாட் எம்.எல்.ஏ.வுக்கு மகாடா அதிகாரிகள் கடிதம் மூலம் தெரிவித்து உள்ளனர்.


Next Story