வீட்டில் பணம் வைத்து சூதாடிய 16 பேர் கைது


வீட்டில் பணம் வைத்து சூதாடிய 16 பேர் கைது
x
தினத்தந்தி 8 Jan 2018 3:55 AM IST (Updated: 8 Jan 2018 3:55 AM IST)
t-max-icont-min-icon

வில்லியனூரில் வீட்டில் காசு வைத்து சூதாடிய 16 பேரை போலீசார் கைது செய்தனர்.

வில்லியனூர்,

வில்லியனூர் வாஞ்சிநாதன் நகரில் உள்ள ஒரு வீட்டில் பணம் வைத்து சூதாட்டம் நடப்பதாக புதுவை அதிரடிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன், சப்–இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் வில்லியனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், சப்–இன்ஸ்பெக்டர் வேலய்யன் மற்றும் போலீசார் வாஞ்சிநாதன் நகருக்கு விரைந்து சென்றனர்.

அங்கு சூதாட்டம் நடந்த வீட்டிற்குள் அதிரடியாக புகுந்து வீட்டு உரிமையாளரான குருமூர்த்தி (வயது 64) என்பவரை பிடித்து விசாரித்தனர். அந்த வீட்டில் போலீசார் சோதனை நடத்தியபோது 2 அறைகளில் தனித்தனியாக 16 பேர் பணம் வைத்து சூதாடிக்கொண்டு இருந்தனர். போலீசாரைப் பார்த்ததும் அவர்கள் தப்பி ஓட முயன்றனர்.

ஆனால் அவர்களை போலீசார் தப்பிக்க விடாமல் மடக்கிப் பிடித்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரித்ததில் முதலியார்பேட்டையை சேர்ந்த அண்ணா (47), சந்திரசேகரன் (62), ஏழுமலை (54), ஆறுமுகம் (42), முத்தியால்பேட்டை பெருமாள் (34), நைனார் மண்டபம் கோபி (34), வில்லியனூர் ஆறுமுகம் (40), அரியாங்குப்பம் வினோத்குமார் (28), மூலக்குளம் முகமது மொகைதீன் (46), கோரிமேடு சங்கர் (44), ஆண்டியார்பாளையம் சுந்தர் (40), எழில் (32), வம்பாகீரப்பாளையம் ரமேஷ் (34) என்பது தெரியவந்தது. இவர்களுடன் வீட்டின் உரிமையாளரான குருமூர்த்தியையும் சேர்த்து 16 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து சூதாட்ட பணம் ரூ.1லட்சத்து 2 ஆயிரம், 16 செல்போன்கள், 9 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் சீட்டுக் கட்டுகளை பறிமுதல் செய்தனர்.

சூதாட்ட கும்பலை மடக்கிப்பிடித்து கைது செய்த வில்லியனூர் போலீசாரை, போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன் பாராட்டினார்.


Next Story