தேசிய கனிமவள மேம்பாட்டு நிறுவனத்தில் பல்வேறு பணி வாய்ப்புகள்
தேசிய கனிமவள மேம்பாட்டு நிறுவனத்தில் பல்வேறு நிலைகளில் 101 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
‘நவரத்னா’ பொதுத் துறை நிறுவனங்களில் ஒன்றான தேசிய கனிமவள மேம்பாட்டு நிறுவனத்தில் (என்.எம்.டி.சி.) பல்வேறு நிலைகளில் 101 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
பயிற்சி பெறுவோராக நியமிக்கப்படும் பணிகள் மற்றும் பணியிட எண்ணிக்கை விவரம்:
மெயின்டனன்ஸ் அசிஸ்டன்ட் (மெக்கானிக்கல்)- 45
மெயின்டனன்ஸ் அசிஸ்டன்ட் (எலக்ட்ரிக்கல்)- 47
அசிஸ்டன்ட் பிசியோதெரபிஸ்ட் கிரேடு 3- 1
அசிஸ்டன்ட் லேப் டெக்னீசியன் கிரேடு 3- 1
அசிஸ்டன்ட் பார்மசிஸ்ட் கிரேடு 3- 1
அசிஸ்டன்ட் டயட்டீசியன் கிரேடு 3- 1
எச்.இ.எம். (மெக்கானிக்கல்) கிரேடு 3/எம்.சி.ஓ. கிரேடு 3- 5
மேலே குறிப்பிடப்பட்டுள்ள பணியிட எண்ணிக்கைகள் தேவையைப் பொறுத்து மாறுபடலாம். மத்திய அரசு வழிகாட்டுதல்படி எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., மற்றும் முன்னாள் படைவீரர் களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படும்.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு 8.5.2015 தேதியின்படி 30 ஆகவும், குறைந்தபட்ச வயது வரம்பு 18 வயதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு அதிகபட்ச வயதுவரம்பில் 5 ஆண்டுகளும், ஓ.பி.சி., முன்னாள் படைவீரர்களுக்கு 3 ஆண்டு களும் தளர்வு அளிக்கப்படும்.
கல்வித் தகுதி:
அந்தந்தப் பணிகளுக்கு ஏற்ப 10-ம் வகுப்பு, பட்ட, டிப்ளமோ தேர்ச்சியும், பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு முறை:
விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு, பணித்திறன் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் விதம்:
தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள், இணையதளம், தபால்வழி ஆகிய இரு முறைகளிலும் விண்ணப்பிக்கலாம். ஒரு விண்ணப்பதாரர், ஏதாவது ஒரு வழியில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். வருகிற 27.1.2018 வரை இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க முடியும்.
இணையதளம் மூலம் விண்ணப்பிக்க விரும்புவோர், www.nmdc.co.in இணையதளத்தில் careers பக்கத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
இணையதள வழியில் விண்ணப்பம் அனுப்புவதற்கு தொழில்நுட்பரீதியாக உதவி செய்வதற்கான ஹெல்ப்லைன் எண் 09674524077, அனைத்து வேலை நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும்.
தபால் வழியில் விண்ணப்பிப்போர், வரை யறுக்கப்பட்ட விதத்திலான விண்ணப்பப் படிவத்தை நிரப்பி, உரிய சான்றிதழ்களை இணைத்து ஜனவரி 27-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
தபால் வழியில் விண்ணப்பம் அனுப்பு வதற்கான முகவரி:
Post Box No. 1352 Post Office, Humayun Nagar, Hyderabad& 500028, Telengana.
தபால் வழி விண்ணப்பக் கடித உறையில் எம்ப்ளாய்மென்ட் நோட்டிபிகேஷன் நம்பர் (04/ 2017), தாங்கள் விண்ணப்பிக்கும் பணி ஆகியவற்றைக் குறிப்பிட வேண்டும். அவ்வாறு குறிப்பிடப்படாமல் அனுப்பப்படும் விண்ணப்பக் கடிதங்கள் நிராகரிக்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்:
விண்ணப்பதாரர்கள் அனைவரும் விண்ணப்பக் கட்டணம் ரூ. 150 செலுத்த வேண்டும். அந்த விண்ணப்பக் கட்டணம் திருப்பி வழங்கப்படாது. எஸ்.சி., எஸ்.டி., முன்னாள் படை வீரர்களுக்கு விண்ணப்பக் கட்டணச் சலுகை அளிக்கப்படும். ஆனால் அதற்கு உரிய சான்றிதழை இணைத்து அனுப்பவேண்டும். இல்லாவிட்டால் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.
பயிற்சிக்குத் தேர்வு செய்யப்படும் அனைவருக்கும் பயிற்சிக் காலத்தில் உரிய உதவித்தொகை வழங்கப்படும். பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்து பணிக்குத் தேர்வு செய்யப்படுவோருக்கு அரசு விதிகளின்படி உரிய சம்பள விகிதம் அளிக்கப்படும்.
விண்ணப்பதாரர்கள் அனைத்து விவரங்களுக்கும் என்.எம்.டி.சி.யின் இணையதளமான www.nmdc.co.in -ல் ‘கேரியர்ஸ்’ பக்கத்தை பார்க்கலாம்.
Related Tags :
Next Story