இந்திய- திபெத் போலீஸ் படையில் பணி


இந்திய- திபெத் போலீஸ் படையில் பணி
x
தினத்தந்தி 8 Jan 2018 12:24 PM IST (Updated: 8 Jan 2018 12:24 PM IST)
t-max-icont-min-icon

இந்திய- திபெத் போலீஸ் படையில் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ந்திய- திபெத் போலீஸ் படையில் தலைமைக் காவலர் (மோட்டார் மெக்கானிக்), காவலர் (மோட்டார் மெக்கானிக்) பணியிடங்கள் 241-க்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள் தற்காலிக முறையில் நிரப்பப்பட்ட போதும், நிரந்தரம் செய்யப்பட வாய்ப்பு இருக்கிறது.

தேர்வு செய்யப்படுவோர் இந்தியாவின் எந்தப் பகுதியிலும் அல்லது வெளிநாடுகளிலும் கூட பணியமர்த்தப்படலாம்.

இணையதளம் வாயிலாக மட்டுமே இப்பணிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

பணியிடங்களின் எண்ணிக்கை:

தலைமைக் காவலர் (மோட்டார் மெக்கானிக்)- 60

காவலர்- 181

மொத்தப் பணியிடங்களில் 10 சதவீதம், முன்னாள் படைவீரர்களுக்கு ஒதுக்கப்படவிருக்கிறது. அவர்களால் நிரப்பப்படாத இடங்கள், மற்ற விண்ணப்பதாரர்களைக் கொண்டு நிரப்பப்படும்.

வயது வரம்பு:

இரு பணிகளுக்கும் 18 முதல் 25 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

வயது வரையறைக்கான முக்கிய தேதி 7.2.2018 ஆகும். அதாவது விண்ணப்ப தாரர்கள், 8.2.1993-க்கு முன்னதாகவோ, 7.2.2000-க்குப் பின்னதாகவோ பிறந் திருக்கக் கூடாது.

அதிகபட்ச வயது வரையறையில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும்.

கல்வித் தகுதி:

தலைமைக் காவலர்- பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அங்கீகரிக்கப்பட்ட தொழிற்பயிற்சி நிறுவனத்தில் மோட்டார் மெக்கானிக் சான்றிதழும், மூன்றாண்டு கால நடைமுறை அனுபவமும் பெற்றிருக்க வேண்டும். அல்லது ஆட்டோ மொபைல் என்ஜினீயரிங்கில் மூன்றாண்டு கால டிப்ளோமா பெற்றிருக்க வேண்டும்.

காவலர்- மெட்ரிக்குலேஷன் அல்லது 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குறிப்பிட்ட துறையில் ஐ.டி.ஐ. சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். அல்லது அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் ஒன்றில் மூன்று ஆண்டு கால பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

உடல்தகுதி: விண்ணப்பதாரர்கள் அதிகபட்சமாக 170 செ.மீ. உயரம் இருக்க வேண்டும். மார்பு சாதாரண நிலையில் 80 செ.மீ.யும், விரிந்த நிலையில் 85 செ.மீ.யும் இருக்க வேண்டும். உயரத்துக்கு ஏற்ற எடை இருக்க வேண்டும். பார்வைத்திறன் கிட்டப்பார்வையில் நல்ல நிலையில் N6, பாதிக்கப்பட்ட நிலையில் N9, தூரப்பார்வை நல்ல நிலையில் 6/6, பாதிக்கப்பட்ட நிலையில் 6/9 என இருக்க வேண்டும்.

விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் www.recruitment.itb police.nic.in என்ற இணையதளத்தின் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இணைய விண்ணப்ப வழி 9.1.2018 முதல் 7.2.2018 வரை திறந்திருக்கும். விண்ணப்பிக்கும் முறை இணையதளத்தில் விவரிக்கப்பட்டிருக்கும். 

Next Story