சாத்தூர் வெங்கடாசலபுரத்தில் மதுக்கடையை மூடக்கோரி காத்திருப்பு போராட்டம்


சாத்தூர் வெங்கடாசலபுரத்தில் மதுக்கடையை மூடக்கோரி காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 9 Jan 2018 3:45 AM IST (Updated: 9 Jan 2018 12:22 AM IST)
t-max-icont-min-icon

சாத்தூர் வெங்கடாசலபுரத்தில் மதுபானக்கடையை மூடக்கோரி காத்திருப்பு போராட்டம் நடந்து வருகிறது.

சாத்தூர்,

சாத்தூர் வெங்கடாசலபுரத்தில் அரசு மதுபானக்கடை திறக்க அதிகாரிகள் முய்ற்சி மேற்கொண்டபோதே கடும் எதிர்ப்பு கிளம்பியது. அந்த பகுதியில் கல்லூரி மற்றும் கோவில் இருப்பதால் மதுக்கடை திறக்க கூடாது என்று வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில் கடந்த மாதம் கடை திறக்கப்பட்டது.

இதனால் கொதித்தெழுந்த அந்தப்பகுதியை சேர்ந்தவர்கள் மதுக்கடைமுன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த தாலுகா வழங்கல் அதிகாரி பேச்சுவார்த்தை நடத்தி கடையை மூட ஏற்பாடு செய்தார். இதனால் சில தினங்கள் அந்த கடை மூடப்பட்டது.

இந்த நிலையில் போலீஸ் பாதுகாப்புடன் கடை மீண்டும் திறக்கப்பட்டது. இதனால் ஆவேசமடைந்த அந்த பகுதியை சேர்ந்த ஆண்களும் பெண்களும் நேற்று காலை கடை முன்பு காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினார்கள். கடையை மூடும்வரை அங்கிருந்து அகல மாட்டோம் என்று அறிவித்து அமர்ந்துள்ளனர்.


Next Story