ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைத்து தொழிற்சங்கத்தினர்- அரசு ஊழியர்கள் 139 பேர் கைது
தூத்துக்குடியில், அரசு போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஆதரவாக தனித்தனியாக 2 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்திய அனைத்து தொழிற்சங்கத்தினர் மற்றும் அரசு ஊழியர்கள் 139 பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி,
தமிழக போக்குவரத்து தொழிலாளர்கள் கடந்த 5 நாட்களாக அரசு ஊழியர்களுக்கு இணையாக சம்பளம் வழங்க வேண்டும், ஓய்வூதியத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பஸ் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ-மாணவிகள், அலுவலக பணியாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஆதரவாக அனைத்து தொழிற்சங்கத்தினர் நேற்று காலை சிதம்பரநகர் பஸ் நிறுத்தம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு சி.ஐ.டி.யு. மாநில செயலாளர் ரசல் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் பாலு, சி.ஐ.டி.யு. போக்குவரத்து தொழிலாளர் சங்க செயலாளர் வின்சென்ட், ஏ.ஐ.டி.யு.சி மாவட்ட செயலாளர் கிருஷ்ணராஜ், மணிஆச்சாரி, ஏ.ஐ.சி.சி.டி.யு. சிவராமன், ஐ.என்.டி.யு.சி. மாவட்ட தலைவர் ராஜ், தொழிலாளர் முன்னேற்ற சங்க மாவட்ட செயலாளர் ரவீந்திரன், தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அப்போது, போராட்டத்துக்கு அனுமதி அளிக்கப்படாததால், பாதுகாப்பு பணியில் இருந்த துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் தலைமையிலான போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 126 பேரை கைது செய்தனர்.
இதேபோன்று, தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில், போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஆதரவாக கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு தூத்துக்குடி வட்ட தலைவர் அண்ணாமலை பரமசிவன் தலைமை தாங்கினார். வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் செந்தூர்ராஜன், அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் வெங்கடேசன், அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர். இதைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 13 அரசு ஊழியர்களை போலீசார் கைது செய்தனர்.
இதனை கண்டித்து மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் ஊழியர்கள் பணியை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். இதனால் கைது செய்யப்பட்ட 13 அரசு ஊழியர்களையும் சிறிது நேரத்தில் போலீசார் விடுவித்தனர். அதன்பிறகு அந்த அரசு ஊழியர்கள் மீண்டும் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தி விட்டு கலைந்து சென்றனர்.

Related Tags :
Next Story