அரசு பஸ் கண்ணாடி உடைப்பு; மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு


அரசு பஸ் கண்ணாடி உடைப்பு; மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
x
தினத்தந்தி 9 Jan 2018 3:45 AM IST (Updated: 9 Jan 2018 2:27 AM IST)
t-max-icont-min-icon

அரசு பஸ் கண்ணாடி உடைப்பு; மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு

உடையார்பாளையம்,

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்களுக்கு அடிப்படை சம்பளத்தில் இருந்து 2.57 சதவீத ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்று போக்குவரத்துக்கழக தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் வைத்த கோரிக்கையை அதிகாரிகள் ஏற்காததால் சென்னையில் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனால் கடந்த 4-ந்தேதி இரவிலிருந்து தமிழகம் முழுவதும் அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், தற்காலிக ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களை கொண்டு தற்போது தமிழக அரசு, அரசு பஸ்களை இயக்கி வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு அரியலூர் மாவட்டம், தா.பழூரில் இருந்து அரசு பஸ் ஒன்று இடையார் வழியாக ஜெயங்கொண்டம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது பஸ் இடையார் வளைவு அருகே வந்த போது, அந்த வழியே மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர்கள் 2 பேர் பஸ்சின் முன்பக்க கண்ணாடியை கற்களை கொண்டு உடைத்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து பஸ் ஓட்டுனர் ரவி (வயது 32) உடையார்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். 

Next Story