திருநங்கை கொலை வழக்கில் வாலிபர் கைது
வேளாங்கண்ணி அருகே கொடுத்த பணத்தை திருப்பி கேட்டதால் திருநங்கையை கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
வேளாங்கண்ணி,
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த பரவை அருகே கிழக்கு கடற்கரை சாலையில் கடந்த ஆண்டு(2017) செப்டம்பர் மாதத்தில் மேரி என்ற திருநங்கை கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த வேளாங்கண்ணி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று திருநங்கையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வேளாங்கண்ணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், கொலையாளியை பிடிக்க நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சேகர் தேஷ்முக் உத்தரவின்பேரில், நாகை டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில், ஆனைக்காரன்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம், வேளாங்கண்ணி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாமிநாதன், ஏட்டு துரைராஜ் ஆகியோர் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
திருநங்கை மேரி பயன்படுத்திய செல்போனை தனிப்படை போலீசார் சோதனை செய்தபோது வேளாங்கண்ணியை அடுத்த தெற்கு பொய்கைநல்லூர் கீழத்தெருவை சேர்ந்த சுந்தரவேல் மகன் ரத்தினகுமார் (வயது28) என்பவர் அடிக்கடி பேசி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் ரத்தினகுமாரை தேடி வந்தனர்.
இதை அறிந்த ரத்தினகுமார் நேற்று முன்தினம் வெளியூருக்கு தப்பி செல்வதற்காக பரவை பஸ் நிலையத்தில் நின்று கொண்டு இருந்த போது போலீசார் அங்கு சென்று அவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ரத்தினகுமாருக்கும், மேரிக்கும் கடந்த சில ஆண்டுகளாக தொடர்பு இருந்து வந்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு மோட்டார் சைக்கிள் வாங்குவதற்காக ரத்தினகுமார், மேரியிடம் ரூ.25 ஆயிரம் வாங்கியுள்ளார். பின்னர் அந்த பணத்தை மேரி திருப்பி கேட்டுள்ளார். இதனால் ரத்தினகுமார், மேரியிடம் பழகுவதை நிறுத்தினார். இதை அறிந்த மேரி தன்னிடம் வாங்கிய பணத்தையும் திருப்பி கேட்டதால் அவர் மீது ரத்தினகுமார் ஆத்திரத்தில் இருந்தார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று பரவை அருகே தனியாக சென்று கொண்டிருந்த மேரியின் கழுத்தை கத்தியால் அறுத்து ரத்தினகுமார் கொலை செய்தது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் ரத்தினகுமாரை கைது செய்தனர். இவர் மீது வெளிநாட்டு சுற்றுலா பயணியை தாக்கி பணம், கேமரா உள்ளிட்டவைகளை கொள்ளையடித்து சென்ற வழக்கு வேளாங்கண்ணி போலீஸ் நிலையத்தில் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story