லாரி மோதி 2 பேர் பலி 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
புள்ளம்பாடி அருகே லாரி மோதி 2 பேர் பலியானார்கள். இதன் காரணமாக 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கல்லக்குடி,
திருச்சி மாவட்டம் கல்லக்குடியில் உள்ள ஒரு தனியார் சிமெண்டு ஆலையில் இருந்து ஒரு லாரி சிமெண்டு மூட்டைகளை ஏற்றிக்கொண்டு திருச்சியை நோக்கி வந்து கொண்டிருந்தது. இதற்கிடையில் புள்ளம்பாடியில் இருந்து அரியலூரை நோக்கி ஒரு மோட்டார் சைக்கிளில் 2 பேர் சென்று கொண்டிருந்தனர்.
மோட்டார் சைக்கிள் இரவு 8.45 மணி அளவில் புள்ளம்பாடிக்கும் ஆரோக்கியபுரத்திற்கும் இடையே உள்ள வெங்கடாசலபுரம் அருகே சென்றபோது, சிமெண்டு மூட்டைகளை ஏற்றி வந்த லாரி மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்த இருவரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இறந்தவர்களின் ஒருவர் வெள்ளைவேட்டியும், ரோஸ்கலரில் சட்டையும் அணிந்து இருந்தார். மற்றொருவர் மஞ்சள் கலர் வேட்டியும், கோட்டும் அணிந்து இருந்தார். மேலும் மோட்டார் சைக்கிளில் சிறிய உடுக்கை, மந்திரகோல் இருந்தது. இதனால் அவர்கள் குறி சொல்பவர்களாக இருக்கலாம் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது. மேலும் அவர்களது பெயர் விவரம் தெரியவில்லை.
போக்குவரத்து பாதிப்பு
விபத்து பற்றி அறிந்த கல்லக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் தினேஷ் குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்தவர்களின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்கு லால்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் திருச்சி-சிதம்பரம் சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Tags :
Next Story