தர்மபுரி மாவட்டங்களில் 60 சதவீத பஸ்கள் இயக்கப்பட்டன பயணிகள் கூட்டம் குறைந்தது
தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் நேற்று 60 சதவீத பஸ்கள் இயக்கப்பட்டன. பஸ்நிலையங்களில் பயணிகள் கூட்டம் குறைவாக இருந்தது.
தர்மபுரி,
தர்மபுரி மாவட்டத்தில் அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் 13 தொழிற்சங்கங்களை சேர்ந்த தொழிலாளர்கள் ஊதிய உயர்வு தொடர்பான கோரிக்கைகளை வலியுறுத்தி 5-வது நாளாக நேற்று தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக தர்மபுரி மாவட்டத்தில் நேற்று அரசு பஸ்கள் இயக்கம் குறைவாக இருந்தது. தனியார் பஸ்கள் வழக்கம்போல் இயக்கப்பட்டன. எனினும் பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் குறைவாக இருந்தது.
தர்மபுரி பஸ் நிலையத்தில் இருந்து வெளிமாவட்டங்கள் மற்றும் பெங்களூருக்கு செல்லும் பஸ்கள் மட்டும் குறைந்த அளவில் இயக்கப்பட்டன. மாற்று டிரைவர்கள் மூலமும், தற்காலிக டிரைவர்கள் மூலமாகவும் அரசு பஸ்களை இயக்க தேவையான நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்டனர். நேற்று மாலை நிலவரப்படி தர்மபுரி மாவட்டம் முழுவதும் 60 சதவீத அரசு பஸ்கள் இயக்கப்பட்டன.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 4-ந் தேதி மாலை முதல் பஸ்கள் இயக்குவது படிப்படியாக குறைந்தது. தொடர்ந்து 5-ந் தேதி 90 சதவீத பஸ்கள் இயக்கப்பட்டன. 6 மற்றும், 7-ந் தேதிகளில் முறையே 50 சதவீத பஸ்கள் இயக்கப்பட்டன.
நேற்று 5-வது நாளாக பஸ்கள் வேலை நிறுத்தம் தொடர்ந்தது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 5 பணிமனைகள் (டெப்போ) மூலமாக மொத்தம் 410 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. நேற்றைய நிலவரப்படி மொத்தம் 246 பஸ்கள் இயக்கப்பட்டன. மொத்தம் 60 சதவீத பஸ்கள் இயக்கப்பட்டன. இதில் பல பஸ்களை தற்காலிக டிரைவர்கள் இயக்கினார்கள். இதனால் பயணிகள் பலரும் பயணத்தை தவிர்த்தனர். இதன் காரணமாக பஸ்களில் பயணிகள் கூட்டம் குறைந்து காணப்பட்டது.
வேப்பனப்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியில் வேப்பனப்பள்ளி சுற்று வட்டார பகுதிகளில் இருந்து மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். பஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக பள்ளி மாணவ, மாணவிகள் பள்ளிக்கு வர சிரமப்பட்டு வருகிறார்கள். இதன் காரணமாக நேற்று பள்ளி வழக்கத்தை விட ஒரு மணி நேரம் முன்னதாக 3 மணிக்கு பள்ளி விடப்பட்டது.
தேன்கனிக்கோட்டை சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் மேல்படிப்புக்காக இங்கு தினமும் அரசு டவுன் பஸ்கள் மூலம் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் நேற்று அரசு பஸ்கள் குறைந்த அளவிலேயே இயக்கப்பட்டதால் பள்ளி முடிந்து வீடு திரும்ப முடியாமல் மாணவ, மாணவிகள் தவித்தனர்.
தனியார் பஸ்களில் கூட்டம் அதிக அளவில் இருந்தது. இதனால் மாணவர்கள் முண்டியடித்துக்கொண்டு பஸ்களில் ஏறினர். சில மாணவர்கள் படிக்கட்டுகளில் தொங்கியபடி ஆபத்தான நிலையில் பயணம் செய்தனர். சிலர் பஸ்களில் ஏற முடியாமல் தவித்தனர். ஒரு சில தனியார் பஸ்களில் அதிக கட்டணம் வசூலித்ததாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

Related Tags :
Next Story