திருவையாறு, திருக்காட்டுப்பள்ளியில் கிராம நிர்வாக அலுவலர்கள் தர்ணா போராட்டம்
திருவையாறு, திருக்காட்டுப்பள்ளியில் கிராம நிர்வாக அலுவலர்கள் தர்ணா போராட்டம்
திருவையாறு,
திருவையாறு தாலுகா அலுவலகம் முன்பு கிராம நிர்வாக அலுவலர்கள் நேற்று இரவு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு திருவையாறு வட்ட தலைவர் ராஜேஷ் கண்ணா தலைமை தாங்கினார். இதில் வட்ட செயலாளர் முகமதுகனிபா, வட்ட பொருளாளர் ராமவேல் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்துகொண்டனர். போராட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு மாவட்ட மாறுதல் வேண்டும். இணையதள சேவை செலவினங்கள் வேண்டும். உட்பிரிவு மற்றும் நகராட்சி பட்டா மாறுதல்களுக்கு கிராம நிர்வாக அலுவலர் பரிந்துரை இணைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதேபோல பூதலூர் வட்டார கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் வட்ட தலைவர் கரிகாலன் தலைமையில் பூதலூர் தாலுகா அலுவலக வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.