காஞ்சீபுரத்தில் மத்திய தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்
போக்குவரத்து தொழிலாளர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து மத்திய தொழிற்சங்கங்கள் நேற்று காஞ்சீபுரத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காஞ்சீபுரம்,
போக்குவரத்து தொழிலாளர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து மத்திய தொழிற்சங்கங்கள் நேற்று காஞ்சீபுரத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சி.ஐ.டி.யு. மாவட்ட துணை செயலாளர் டி.ஸ்ரீதர் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் ஆர்.மதுசூதனன் முன்னிலை வகித்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய தொழிற்சங்கங்களான சி.ஐ.டி.யு., எல்.பி.எப்., ஏ.ஐ.டி.யு.சி., ஐ.என்.டி.யு.சி., எச்.எம்.எஸ்., ஏ.டி.சி.சி.டி.யு. உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கங்களை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர்.
--–
பிட் முதல் எடிசன் (படம் உண்டு)Related Tags :
Next Story