நெல்லையில் வாகனம் மோதி விவசாயி பலி மகளுக்கு பொங்கல்படி கொடுத்துவிட்டு திரும்பிய போது பரிதாபம்


நெல்லையில் வாகனம் மோதி விவசாயி பலி மகளுக்கு பொங்கல்படி கொடுத்துவிட்டு திரும்பிய போது பரிதாபம்
x
தினத்தந்தி 10 Jan 2018 2:00 AM IST (Updated: 9 Jan 2018 8:09 PM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் மகளுக்கு பொங்கல் படி கொடுத்து விட்டு திரும்பிய விவசாயி, வாகனம் மோதி பரிதாபமாக இறந்தார்.

நெல்லை,

நெல்லையில் மகளுக்கு பொங்கல் படி கொடுத்து விட்டு திரும்பிய விவசாயி, வாகனம் மோதி பரிதாபமாக இறந்தார்.

விவசாயி

தூத்துக்குடி மாவட்டம் தெற்கு ஆத்தூரை சேர்ந்தவர் வீரபத்திரன் (வயது 53). இவர் வெற்றிலை விவசாயம் செய்து வந்தார். இவருடைய மனைவி பார்வதி (48). இவர்களுடைய மகள் வீடு நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ளது.

நேற்று முன்தினம் வீரபத்திரனும், பார்வதியும் மஞ்சள் குலை, கரும்பு உள்ளிட்ட பொருட்களை வாங்கிக் கொண்டு, மகள் வீட்டுக்கு சென்று பொங்கல் படி கொடுத்தனர். பின்னர் மகள் வீட்டில் சாப்பிட்டு விட்டு ஊருக்கு புறப்பட்டனர். வண்ணார்பேட்டை பஸ் நிறுத்தத்துக்கு செல்வதற்காக வடக்கு புறவழிச்சாலை பகுதியில் கணவன், மனைவி இருவரும் நடந்து சென்றனர்.

வாகனம் மோதியது

அப்போது அந்த வழியாக ஆட்டோ, கார் உள்ளிட்ட வாகனங்கள் போட்டி போட்டு முந்திச் சென்றன. இதில் ஒரு வாகனம் வீரபத்திரன் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த அவரை, அக்கம் பக்கத்தினர் மீட்டு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் நேற்று காலை அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் பழனிமுருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story