நெல்லை டவுனில் மனைவியை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை
நெல்லை டவுனில் மனைவியை கொன்றவருக்கு கோர்ட்டில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
நெல்லை,
நெல்லை டவுனில் மனைவியை கொன்றவருக்கு கோர்ட்டில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
மனைவி கொலைநெல்லை டவுன் மேட்டுதெருவை சேர்ந்தவர் ஆவுடையப்பன் என்ற ராஜ் (வயது 31), கூலி தொழிலாளி. இவருடைய மனைவி ராமலட்சுமி (28). இவர்களுக்கு யுவராஜ் (6) என்ற மகனும், வைஷ்ணவி (3) என்ற மகளும் உள்ளனர்.
கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த 2015–ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 6–ந் தேதி அன்று இரவு கணவன் –மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ஆவுடையப்பன் மனைவி ராமலட்சுமியை அடித்து உதைத்து கீழே தள்ளி இரும்பு கம்பியால் தலையில் அடித்து கொலை செய்தார்.
ஆயுள் தண்டனைஇதுகுறித்து நெல்லை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆவுடையப்பனை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை நெல்லை மாவட்ட 4–வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நீதிபதி கிளாட்சன் பிளசட் தாகூர் வழக்கை விசாரித்து நேற்று தீர்ப்பு அளித்தார்.
இதில் ஆவுடையப்பனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதிக்கப்பட்டது. அரசு தரப்பில் 19 சாட்சிகள் விசாரிக்கப்பட்டன. இந்த வழக்கில் போலீஸ் தரப்பில் அரசு வக்கீல் துரை முத்துராஜ் ஆஜராகி வாதாடினார்.