அரசு உயர் அதிகாரிகளுடன் நாராயணசாமி ஆலோசனை


அரசு உயர் அதிகாரிகளுடன் நாராயணசாமி ஆலோசனை
x
தினத்தந்தி 10 Jan 2018 4:00 AM IST (Updated: 10 Jan 2018 2:05 AM IST)
t-max-icont-min-icon

புதுவை நகரப்பகுதியில் போக்குவரத்து நெரிசல், இடநெருக்கடி உள்ளிட்டவற்றை போக்கிட நகரமைப்பு குழுமம் சார்பில் மாஸ்டர் பிளான் தயாரிக்கப்பட உள்ளது.

புதுச்சேரி,

புதுவை நகரப்பகுதியில் போக்குவரத்து நெரிசல், இடநெருக்கடி உள்ளிட்டவற்றை போக்கிட நகரமைப்பு குழுமம் சார்பில் மாஸ்டர் பிளான் தயாரிக்கப்பட உள்ளது. இதுதொடர்பான ஆலோசனை கூட்டம் சட்டமன்ற காபினட் அறையில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு முதல்–அமைச்சர் நாராயணசாமி தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் அமைச்சர்கள் நமச்சிவாயம், ஷாஜகான், நகரமைப்பு குழு தலைவர் ஜெயமூர்த்தி எம்.எல்.ஏ., தலைமை செயலாளர் அஸ்வனிகுமார், அரசு செயலாளர்கள் கந்தவேலு, ஜவகர், பார்த்திபன், இயக்குனர் மலர்கண்ணன் உள்பட நகரமைப்பு குழும அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.


Next Story