உள்ளாட்சித்துறை அலுவலகத்தை முற்றுகை: நகராட்சி–கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் 200 பேர் கைது


உள்ளாட்சித்துறை அலுவலகத்தை முற்றுகை: நகராட்சி–கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் 200 பேர் கைது
x
தினத்தந்தி 10 Jan 2018 5:00 AM IST (Updated: 10 Jan 2018 2:05 AM IST)
t-max-icont-min-icon

நகராட்சி–கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 3–ந்தேதி முதல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

புதுச்சேரி,

7–வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்தக்கோரி புதுவை மாநில நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் கூட்டு நடவடிக்கை குழுவினர் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அவர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 3–ந்தேதி முதல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று காலை உள்ளாட்சித்துறை இயக்குனர் அலுவலகத்தை அவர்கள் முற்றுகையிட்டனர். அப்போது பணிக்கு வந்த ஊழியர்களை அலுவலகத்துக்குள் செல்லவிடாமல் தடுத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் அங்கு பெரியகடை போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் ஊழியர்கள் சமாதானம் ஆகாமல் போராட்டத்தை தொடர்ந்தனர். இதைத்தொடர்ந்து கன்வீனர் ஆனந்த கணபதி உள்பட சுமார் 200 பேர் கைது செய்யப்பட்டனர்.


Next Story