அரசு பஸ்களில் அச்சத்துடன் பயணம் செய்யும் பொதுமக்கள்
ஊத்துக்கோட்டை அருகே அரசு பஸ்களில் பொதுமக்கள் அச்சத்துடன் பயணம் செய்கின்றனர்.
ஊத்துக்கோட்டை,
ஊத்துக்கோட்டை அரசு பஸ் பணிமனையில் மொத்தம் 46 பஸ்கள் உள்ளன. போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் காரணமாக பெரும்பாலான பஸ்கள் இயக்கப்பட வில்லை.
குறைந்த எண்ணிக்கையில் இயங்கும் பஸ்களை லாரி டிரைவர்கள் மற்றும் ஐ.ஆர்.டி.யில் பயிற்சி முடித்தவர்களை கொண்டு இயக்குகின்றனர். இவர்களை நம்பி பொதுமக்கள் பஸ்களில் செல்ல அச்சப்படுகின்றனர்.
அவசர வேலைக்காக செல்லக்கூடியவர்கள் மற்றும் அரசு, தனியார் நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் மட்டும் பஸ்களில் சென்று வருகின்றனர். இதனால் குறைந்த எண்ணிக்கையிலான பொதுமக்கள் மட்டும் பஸ்களில் பயணம் செய்கின்றனர்.
அதுவும் கல்வீச்சு போன்ற சம்பவங்களால் எங்கு பஸ்கள் பாதி வழியில் நிறுத்தி விடுவார்களோ என்ற அச்சத்தில் பொதுமக்கள் சென்று வருகின்றனர். பலர் பயணத்தை ரத்து செய்து விடுகின்றனர்.
Related Tags :
Next Story