உத்தரபிரதேச முதல்-மந்திரிக்கு நடிகர் பிரகாஷ்ராஜ் கேள்வி


உத்தரபிரதேச முதல்-மந்திரிக்கு நடிகர் பிரகாஷ்ராஜ் கேள்வி
x
தினத்தந்தி 10 Jan 2018 5:24 AM IST (Updated: 10 Jan 2018 5:33 AM IST)
t-max-icont-min-icon

பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கடந்த ஆண்டு (2017) துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பெங்களூரு,

பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கடந்த ஆண்டு (2017) துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை அடுத்து, நடிகர் பிரகாஷ்ராஜ் பிரதமர் மோடிக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். இதற்கு பா.ஜனதா கட்சியை சேர்ந்த பிரதாப்சிம்ஹா எம்.பி. அவரை தாக்கி டுவிட்டரில் கருத்தை பதிவு செய்தார். உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகிஆதித்யநாத்துக்கு எதிராகவும் பிரகாஷ்ராஜ் கருத்து தெரிவித்து இருந்தார். இப்படி தொடர்ந்து பிரகாஷ்ராஜ் விமர்சனம் செய்து வருகிறார்.

இந்த நிலையில் யோகிஆதித்யநாத் சில நாட்களுக்கு முன்பு பெங்களூருவில் நடைபெற்ற பா.ஜனதாவின் பரிவர்த்தனா யாத்திரை பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது சித்தராமையா அரசை அவர் கடுமையான குற்றம்சாட்டினார். இந்த நிலையில் நடிகர் பிரகாஷ்ராஜ் தனது டுவிட்டரில் யோகிஆதித்யநாத் பற்றி ஒரு பதிவை வெளியிட்டு இருக்கிறார். அதில், “சுவர்களின் நிறத்தை மாற்றுவதே வளர்ச்சியா?. உத்தரபிரதேசத்தில் விவசாயிகள் நல்ல விலை கிடைக்காததால் தக்காளியை உங்கள் வீட்டின் முன் கொட்டுகிறார்கள். அதை கவனியுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார். 

Next Story