சங்கரன்கோவிலில் செங்குந்த சமுதாயத்தினர் வேலைநிறுத்தம்– கண்டன ஆர்ப்பாட்டம்


சங்கரன்கோவிலில் செங்குந்த சமுதாயத்தினர் வேலைநிறுத்தம்– கண்டன ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 11 Jan 2018 2:45 AM IST (Updated: 10 Jan 2018 8:00 PM IST)
t-max-icont-min-icon

சங்கரன்கோவிலில் செங்குந்தர் சமுதாயத்தினர் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சங்கரன்கோவில்,

சங்கரன்கோவிலில் செங்குந்தர் சமுதாயத்தினர் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கண்டன ஆர்ப்பாட்டம்

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் செங்குந்தர் சமுதாயம் சார்பில் சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதியை பொதுத்தொகுதியாக அறிவிக்க வேண்டும், சங்கரன்கோவில் நகரசபை தலைவர் பதவியை பொது பிரிவாக அறிவிக்க வேண்டும், சங்கரன்கோவில் நகரசபை வார்டுகளை 30–ல் இருந்து 40 ஆக உயர்த்த வரண்முறைப்படுத்த வேண்டும், சங்கரன்கோவில் நகரசபை பகுதியோடு இணைந்து அமைந்துள்ள களப்பாகுளம் பஞ்சாயத்து பகுதியை சேர்ந்த நெசவாளர் காலணி, நேதாஜி நகர், பாரதிநகர், தாசையாநகர் உள்ளிட்ட பகுதிகளை சங்கரன்கோவில் நகரசபையில் இணைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று சங்கரன்கோவில் நகர் பகுதியில் உள்ள அனைத்து விசைத்தறி கூடங்கள் மற்றும் வியாபார நிலையங்களை அடைத்து ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சங்கரன்கோவில் தேரடி திடலில் வைத்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தென்னிந்நதிய செங்குந்த மகாஜனசங்க மாநில இளைஞர் அணி அமைப்பாளர் மாரிமுத்து தலைமை தாங்கினார். செங்குந்தர் அபிவிருத்தி சங்க தலைவர் ராமசுப்பு, தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்க தலைவர் ஜெகநாதன், மாஸ்டர் வீவர்ஸ் அசோசியேசன் சங்க தலைவர் சுப்பிரமணியன், செங்குந்தர் முன்னேற்ற சங்க தலைவர் சக்திவேல், திருமுருகன் சிறுவிசைத்தறி சங்க தலைவர் முத்துசங்கரநாராயணன், சமூக வளர்ச்சி மன்ற தலைவர் முப்பிடாதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். செங்குந்தர் முன்னேற்ற சங்க செயலாளர் மாரிமுத்து வரவேற்றார்.

பிரதிநிதித்துவம் இல்லை

இதில் சங்கரன்கோவில் தொகுதி கடந்த 45ஆண்டுகளுக்கும் மேலாக பொதுதொகுதியாக இல்லை. மேலும் நகர் மன்றத்திலும் செங்குந்த சமுதாய மக்களுக்கு என பிரதிநிதித்துவம் இல்லாத சூழ்நிலையை தற்போது வார்டுகள் மறுவரையறை என்ற பெயரில் உண்டாக்கப்பட்டுள்ளது. இதை தேர்தல் ஆணையம் மற்றும் தமிழக அரசு உடனே மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தில் அனைத்து சங்கங்களை சார்ந்த பழனிச்சாமி, முத்துசங்கரநாராயணன், சுப்பிரமணியன், கிளை சங்கங்களை சார்ந்த கோமதிநாயகம், பரமசிவம், சங்கர், சங்கரவேல், மற்றும் அனைத்து கட்சி நிர்வாகிகள் சங்கரன், சங்கரசுப்பிரமணியன், அருணா, மாரிச்சாமி, பிரகாஷ், சேனா, வர்த்தக சங்க செயலாளர் குருநாதன், வழக்கறிஞர் சரவணன், மற்றும் ஏராளமான பெண்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். முடிவில் செங்குந்த முன்னேற்ற சங்க துணை தலைவர் முருகேசன் நன்றி கூறினார்.

ஊர்வலமாக புறப்பட்டுச் சென்றனர்

அதனை தொடர்ந்து ஊர்வலமாக சென்று நகராட்சி ஆணையாளர் தாணுமுர்த்தியிடம் தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர்.


Next Story