தூத்துக்குடி மாவட்டத்தில் அம்மா திட்ட முகாம் நடைபெறும் கிராமங்கள் பட்டியல் கலெக்டர் அறிவிப்பு


தூத்துக்குடி மாவட்டத்தில் அம்மா திட்ட முகாம் நடைபெறும் கிராமங்கள் பட்டியல் கலெக்டர் அறிவிப்பு
x
தினத்தந்தி 11 Jan 2018 2:00 AM IST (Updated: 10 Jan 2018 8:59 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் அம்மா திட்ட முகாம் நடைபெறும் கிராமங்கள் பட்டியலை கலெக்டர் வெங்கடேஷ் அறிவித்து உள்ளார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தில் அம்மா திட்ட முகாம் நடைபெறும் கிராமங்கள் பட்டியலை கலெக்டர் வெங்கடேஷ் அறிவித்து உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:–

அம்மா திட்டமுகாம்

அனைத்து கிராமங்களில் அடித்தட்டு மக்களுக்கு அதிக சேவை வழங்க தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள அம்மா திட்ட முகாம் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமைகளில், அந்தந்த தாசில்தார்கள் தலைமையில் நடக்கிறது. இந்த வாரத்துக்கான முகாம் நாளை(வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

இந்த முகாம் தூத்துக்குடி தாலுகா கோரம்பள்ளம் பகுதி–2 கிராமத்திலும், ஸ்ரீவைகுண்டம் தாலுகா செக்காரக்குடியிலும், திருச்செந்தூர் தாலுகா திருக்களூர் கிராமத்திலும், சாத்தான்குளம் தாலுகா பன்னம்பாறையிலும், கோவில்பட்டி தாலுகா புளியங்குளத்திலும், விளாத்திகுளம் தாலுகா கோட்டநத்தம் கிராமத்திலும், எட்டயபுரம் தாலுகா முத்துலாபுரத்திலும், ஓட்டப்பிடாரம் தாலுகா புதியம்புத்தூரிலும், கயத்தார் தாலுகா ஓணமாக்குளத்திலும் முகாம் நடக்கிறது.

உடனடியாக...

இந்த முகாம்களில் மக்களின் குறைகளை தீர்க்கும் வண்ணம் முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட சமூக பாதுகாப்புத் திட்டங்கள், பட்டா மாறுதல், இலவச வீட்டுமனை பட்டாக்கள், உழவர் பாதுகாப்பு அட்டை, பிறப்பு – இறப்பு சான்றுகள், சாதிச்சான்றுகள், மற்றும் வருவாய் துறையினரால் நிறைவேற்றப்பட வேண்டிய கோரிக்கைகள் குறித்த விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு உடனடியாக நிறைவேற்றப்பட உள்ளது.

எனவே பொதுமக்கள் இந்த முகாம்களில் தங்கள் கோரிக்கை மனுக்களை கொடுத்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.


Next Story