அண்ணன், தங்கைக்கு பாலியல் தொல்லை: பள்ளி ஆசிரியருக்கு 20 ஆண்டு ஜெயில்


அண்ணன், தங்கைக்கு பாலியல் தொல்லை: பள்ளி ஆசிரியருக்கு 20 ஆண்டு ஜெயில்
x
தினத்தந்தி 11 Jan 2018 2:42 AM IST (Updated: 11 Jan 2018 2:42 AM IST)
t-max-icont-min-icon

அண்ணன், தங்கைக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த உருது பள்ளி ஆசிரியருக்கு 20 ஆண்டு ஜெயில் தண்டனை வழங்கி சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

மும்பை,

மும்பையை சேர்ந்த பெண் ஒருவர் தன் வீட்டருகே உள்ள பள்ளியில் வேலை பார்த்து வந்தார். அந்த பெண்ணின் 13 வயது மகன் மற்றும் 11 வயது மகள் அந்த பள்ளியில் படித்து வந்தனர். அந்த பள்ளியில் 30 வயது ஆசிரியர் சிறுவன், சிறுமிக்கு உருது பாடம் கற்று கொடுத்து வந்தார்.

கடந்த 2015–ம் ஆண்டு பள்ளியில் வைத்து உருது ஆசிரியர் சிறுவன், சிறுமிக்கு மடிக்கணினியில் ஆபாச படத்தை காட்டி பாலியல் வன்முறையில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுவன், சிறுமி தனது தாயிடம் கூறி அழுதனர். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர், சம்பவம் குறித்து அங்குள்ள போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, உருது ஆசிரியரை அதிரடியாக கைது செய்தனர். இந்த வழக்கு மீதான விசாரணை மும்பை பெண்கள் சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது.

இந்தநிலையில் வழக்கு மீதான விசாரணை நிறைவடைந்து தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் அண்ணன், தங்கைக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த ஆசிரியருக்கு 20 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி பரபரப்பு தீர்ப்பு அளித்தார்.


Next Story