மதக்கலவரத்தை உண்டாக்கி ஆட்சியை பிடிக்க பா.ஜனதா சதி மந்திரி கே.ஜே.ஜார்ஜ் குற்றச்சாட்டு
கர்நாடகத்தில் மதக்கலவரத்தை உண்டாக்கி ஆட்சியை பிடிக்க பா.ஜனதா சதி செய்வதாக மந்திரி கே.ஜே.ஜார்ஜ் குற்றம்சாட்டினார்.
பெங்களூரு,
மத்திய அரசு பொய்யான வாக்குறுதிகளை அளிக்கிறது. மத்தியில், பா.ஜனதா அரசு அமைந்த பிறகு எந்த வளர்ச்சிப் பணிகளையும் செய்யவில்லை. அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சிக்கு, முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பெரிய அளவில் ஊக்கம் அளித்தது. பிரதமர் மோடி பண மதிப்பிழப்பு திட்டத்தை அமல்படுத்தியதால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி சரிந்துவிட்டது.
பிரதமர் மோடி கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது, வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை கொண்டு வந்து ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்வதாக கூறினார். ஆனால் ஆட்சி அதிகாரத்திற்கு வந்து 4 ஆண்டுகள் ஆகப்போகிறது. இதுவரை யாருடைய வங்கி கணக்கிலும் ஒரு பைசா கூட டெபாசிட் செய்யவில்லை. கடந்த 2013–ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற்றபோது, நாங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறோம்.சொன்னபடி நடந்து கொண்டுள்ளோம். சொல்லாத திட்டங்களையும் அமல்படுத்தியுள்ளோம். அரசு நிலத்தில் வீடு கட்டி வாழ்ந்து வரும் மக்களுக்கு உரிமை பத்திரத்தை வழங்க எங்கள் அரசு முடிவு செய்து, அதற்கான சட்ட திருத்தத்தையும் செய்துள்ளது. கர்நாடகத்தில் மதக்கலவரத்தை உண்டாக்கி ஆட்சியை பிடிக்க பா.ஜனதா சதித்திட்டம் தீட்டுகிறது. இதற்கு மாநில மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும்.
இவ்வாறு கே.ஜே.ஜார்ஜ் கூறினார்.
Related Tags :
Next Story