கர்நாடகத்தில் நல்லாட்சி மலர பா.ஜனதா ஆட்சி அமைய வேண்டும்
கர்நாடகத்தில் நல்லாட்சி மலர பா.ஜனதா ஆட்சி அமைய வேண்டும் என்று சித்ரதுர்காவில் பா.ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா கூறினார்.
சிக்கமகளூரு,
பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா நேற்று சித்ரதுர்கா மாவட்டம் ஒலல்கெரேவுக்கு வந்தார். அங்கு கர்நாடக மாநில பா.ஜனதா தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான எடியூரப்பா தலைமையில் நடந்த பரிவர்த்தனா யாத்திரை மற்றும் பா.ஜனதா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
கர்நாடக வருங்கால முதல்-மந்திரி எடியூரப்பா உள்பட இங்கு வந்துள்ள அனைவருக்கும் என் வணக்கம். பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அவர் புதுடெல்லியில் இருந்தாலும், நம்மைப் பற்றியே நினைத்துக் கொண்டு இருப்பார். இங்கு கூடியுள்ள நாமெல்லாம் ஒரே இனம். நாம் எப்போதும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். இந்த ஒற்றுமை கடைசி வரையில் இருக்க வேண்டும்.
சித்ரதுர்காவில் எம்.எல்.சி. கோவிந்தராஜ் வீட்டில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வருமான வரி சோதனை நடந்தது. அப்போது அவருடைய வீட்டில் இருந்து ஒரு டைரியை அதிகாரிகள் கைப்பற்றினர். அந்த டைரியில் இருந்த தகவல்களை வைத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தாலே கர்நாடகத்தில் உள்ள பாதி மந்திரிகள் ஊழல் வழக்குகளில் சிக்குவார்கள்.
நாங்கள் பரிவர்த்தனா யாத்திரையை இதுவரையில் 170 தொகுதிகளில் முடித்துள்ளோம். நாங்கள் செல்லும் இடமெல்லாம் மக்களை சந்தித்து மாநில அரசின் ஊழல் பற்றி விளக்கம் அளித்து வருகிறோம். எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் ஊழல் நிறைந்த காங்கிரஸ் அரசை வீட்டுக்கு அனுப்புவதே எங்கள் லட்சியம்.
மாநில அரசின் கியாஸ் வழங்கும் திட்டம், பெண்களுக்கான உஜ்வாலா திட்டம் உள்பட பல்வேறு திட்டங் களில் ஊழல் நடந்துள்ளது.
மேலும் மாநில அரசு வசூலித்த மக்களின் வரிப்பணம் எங்கே போனது என்று தெரியவில்லை. வரிப்பணத்திற்கும் மாநில அரசிடம் கணக்கு இல்லை. முதல்-மந்திரி சித்தராமையா ரூ.70 லட்சம் மதிப்பிலான கைக்கெடிகாரத்தை வைத்திருந்தார். அதுபற்றி கேட்டபோது அவர் தனது நண்பர் தனக்கு பரிசாக வழங்கியதாக கூறினார். மாநிலத்தில் பல்வேறு பிரச்சினைகள் நிறைந்திருக்க, அவருக்கு ரூ.70 லட்சம் கைக்கெடிகாரம் தேவையா?.
விலை மதிப்பு கொண்ட பொருளை யாராவது பரிசாக கொடுத்தால் அதன் பின்னணியில் ஏதோ இருக்கிறது என்று அர்த்தம். சித்தராமையாவுக்கு ரூ.70 லட்சம் மதிப்புள்ள கைக்கெடிகாரம் பரிசாக கொடுக்கப்பட்டதின் பின்னணியில் வேறு நோக்கம் உள்ளது என்பது உங்களுக்கு தெரியும்.
முதல்-மந்திரி சித்தராமையா, தொழில் அதிபர்களுடன் நெருங்கி பழகி வருகிறார். அவர்களுக்கு ஆதரவாகவே செயல்பட்டு வருகிறார். அவர் ஏழை, எளிய மக்களைப் பற்றி நினைக்கவில்லை. இதுமட்டுமல்லாமல் பெங்களூருவில் அமைய உள்ள இரும்பு மேம்பாலத்தில் ரூ.100 கோடி ஊழல், குடிநீர் திட்டங்களில் ரூ.900 கோடி ஊழல் உள்பட பல்வேறு ஊழல்களில் முதல்-மந்திரி சித்தராமையா மற்றும் மந்திரிகள் ஈடுபட்டுள்ளனர்.
மந்திரிகள் சந்தோஷ் லாட், டி.கே.சிவக்குமார் ஆகியோரின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரி சோதனை நடந்ததை மக்கள் யாரும் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது.
காங்கிரஸ் ஆட்சி அரியணையில் அமர்ந்ததில் இருந்து இதுவரையில் பா.ஜனதா மற்றும் இந்து அமைப்பினர் 23 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். நாங்கள்(பா.ஜனதா) ஆட்சிக்கு வந்தால் கொலையாளிகள் யாரென்று கண்டறிந்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்போம். மாநிலத்தில் பிரச்சினைக்குரிய முஸ்லிம் அமைப்பை தடை செய்வோம்.
கர்நாடகத்தில் நல்லாட்சி மலர பா.ஜனதா ஆட்சி அமைய வேண்டும். எதிர்வரும் காலத்தில் கண்டிப்பாக அது நடக்கும். அதற்கு மக்கள் அனைவரும் பா.ஜனதாவுக்கு ஆதரவு தர வேண்டும். முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் கர்நாடகத்திற்கு ரூ.88 ஆயிரத்து 583 கோடி நிதி வழங்கப்பட்டது. மத்தியில் மோடி பிரதமராக பதவி ஏற்ற பிறகு கர்நாடகத்திற்கு ரூ.2.19 லட்சம் கோடி நிதி உதவி வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்த பணத்தின் பயன் உங்களுக்கு கிடைத்ததா? உங்களுக்கு வரவில்லை என்றால், அந்த பணம் எங்கே போனது?. மத்திய அரசு வழங்கிய நிதியில் சித்தராமையா ஊழல் செய்துவிட்டார். மத்திய அரசு வழங்கிய நிதிக்கு சித்தராமையா கணக்கு கொடுக்க வேண்டும். 2014-ம் ஆண்டில் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா எப்படி வெற்றி பெற்றதோ, அதே போல் கர்நாடகத்தில் சட்டசபை தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெறுவது உறுதி.
கர்நாடகத்தில் இதுவரை எந்த வளர்ச்சியும் ஏற்படவில்லை. இந்த காங்கிரஸ் அரசு இருக்கும் வரை மாநிலம் வளர்ச்சி அடையாது. பிரதமர் மோடி கொடுத்த பணத்தில் காங்கிரஸ் தலைவர்கள் வசதி வாய்ப்பு பெற்றுவிட்டனர். மக்களுக்கு எந்த பயனும் கிடைக்கவில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.

Related Tags :
Next Story