கிராம நிர்வாக அலுவலக உதவியாளர்கள் ஒருநாள் விடுப்பு எடுத்து போராட்டம்


கிராம நிர்வாக அலுவலக உதவியாளர்கள் ஒருநாள் விடுப்பு எடுத்து போராட்டம்
x
தினத்தந்தி 11 Jan 2018 4:26 AM IST (Updated: 11 Jan 2018 4:26 AM IST)
t-max-icont-min-icon

கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலக உதவியாளர்கள் ஒருநாள் விடுப்பு எடுத்து போராட்டம் நடத்தினார்கள்.

அந்தியூர்,

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலக உதவியாளர்கள் நேற்று ஒருநாள் விடுப்பு எடுத்து போராட்டம் நடத்தினார்கள். அலுவலக ஊழியர்களுக்கு இணையான சம்பளம் வழங்கவேண்டும். ஓய்வு பெறும்போது கடைசி சம்பளத்தில் 50 சதவீதத்தை ஓய்வூதியமாக வழங்கவேண்டும். ஒரு மாத சம்பளத்தை பொங்கல் போனசாக வழங்கவேண்டும். ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.

அந்தியூர் தாலுகாவில் 28 கிராம நிர்வாக அலுவலகம் உள்ளது. இதில் பணியாற்றும் அனைத்து கிராம நிர்வாக அலுவலர்களும் நேற்று ஒருநாள் விடுப்பு எடுத்து போராட்டம் நடத்தினார்கள்.


Next Story