திருச்சி இணை ஆணையர் அலுவலகம் அருகில் அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
திருச்சி தொழிலாளர் இணை ஆணையர் அலுவலகம் அருகில் அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கே.கே.நகர்,
ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் கடந்த 4-ந்தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். திருச்சி மாவட்டத்தில் நேற்று 7-வது நாளாக அரசு போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டம் தொடர்ந்தது. இந்த நிலையில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்கள் பலர் நேற்று திருச்சி மன்னார்புரத்தில் உள்ள தொழிலாளர் இணை ஆணையர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்த கும்பல், கும்பலாக சென்றனர்.
அப்போது அலுவலகத்திற்கு சுமார் 100 மீட்டர் தொலைவிலேயே அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதைத்தொடர்ந்து அவர்கள் அலுவலகம் அருகில் ஒன்று கூடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். தொடர்ந்து ஒவ்வொரு தொழிற்சங்க நிர்வாகிகள் கோரிக்கைகள் குறித்து விளக்கம் அளித்து பேசினர். பின்னர் பல்வேறு கோஷங்களை எழுப்பினர். காலை 11 மணி முதல் 12 மணி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தொழிற்சங்க நிர்வாகிகள் நிருபர்களிடம் கூறியதாவது:-
எங்கள் சொத்து
வேலை நிறுத்த போராட்டம் நடத்துவது குறித்து தொழிலாளர் அலுவலகத்தில் தான் நோட்டீசு கொடுத்து உள்ளோம். எனவே தான் தற்போது இங்கு ஆர்ப்பாட்டம் நடத்தி உள்ளோம். தமிழகம் முழுவதும் உள்ள தொழிலாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு உள்ளது. எனவே தொழிலாளர் இணை ஆணையர் தலையிட்டு புதிய ஊதிய உயர்வு ஒப்பந்தம் ஏற்படுத்த வேண்டும். தற்போது தற்காலிக பணியாளர்களை வைத்து பஸ்கள் இயக்கப்படுகின்றன. மக்கள் பாதிக்கக்கூடாது என்பதற்காக தற்காலிக பணியாளர்கள் பஸ்கள் இயக்குவதை நாங்கள் தடுக்கவில்லை. ஆனால் இதில் பல்வேறு தவறுகள் நடக்கிறது. அரசு பஸ் எங்கள் சொத்து. எங்கள் சொத்தை காப்பாற்ற தற்காலிக டிரைவர்களை வைத்து இயக்கப்படும் பஸ்களை இயக்காமல் தடுக்கவும் திட்டமிட்டு உள்ளோம். இந்த ஆர்ப்பாட்டத்தில் திருச்சி, கரூர், அரியலூர், துறையூர், உப்பிலியபுரம், முசிறி, மணப்பாறை, துவரங்குறிச்சி, லால்குடி, துவாக்குடி ஆகிய பணிமனைகளில் இருந்து ஏராளமான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Tags :
Next Story