ஸ்ரீவில்லிபுத்தூரில் யூனியன் வார்டு மாற்றத்தை எதிர்த்து சாலை மறியல்
யூனியன் வார்டு மாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்ரீவில்லிபுத்தூரில் சாலை மறியல் போராட்டம் நடந்தது.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் யூனியன் பிள்ளையார்குளம் ஊராட்சிக்குட்பட்ட பகுதி பெருமாள்தேவன்பட்டி. இந்த பகுதி 12-வது யூனியன் வார்டில் நீண்டகாலமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தற்போதைய வார்டு மறுவரையறை வரைவு கருத்துருவில் 12-வது வார்டில் இருந்த பெருமாள்தேவன்பட்டி 12 கி.மீ. தூரத்திலுள்ள 14-வது வார்டுக்குட்பட்ட கீழராஜகுலராமன் பகுதியில் சேர்க்கப்பட்டுள்ளது.
இந்த மாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த பெருமாள்தேவன்பட்டி கிராமத்தினர் பழைய நிலையிலேயே 12-வது வார்டு பகுதி தொடர வேண்டும் என்று மனு அனுப்பியும் உரிய பதில் இல்லாததால் நேற்று ஸ்ரீவில்லிபுத்தூர் யூனியன் அலுவலகத்திற்கு வந்தனர். தனித்தனியாக அதிகாரியிடம் மனு கொடுப்பதற்கு வந்ததாக தெரிவித்தனர். ஆனால் வட்டார வளர்ச்சி அதிகாரி அங்கு இல்லாததால் ஆவேசமடைந்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்- ராஜபாளையம் மெயின் ரோட்டில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். வட்டார வளர்ச்சி அதிகாரி வரும்வரை மறியல் செய்வோம் என்றனர். நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்தார். அனைவரும் தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். மாலையில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

Related Tags :
Next Story