சேலம் தொழிலாளர் நல அலுவலகத்தை போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் முற்றுகை
போக்குவரத்து கழக தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் 7-வது நாளாக நீடித்தது. நேற்று சேலம் தொழிலாளர் நல அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடந்தது. பணிக்கு செல்பவர்களை தடுத்ததாக சில டிரைவர்கள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டனர்.
சேலம்,
அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 4-ந் தேதி முதல் தமிழகம் முழுவதும் பஸ்களை இயக்க மறுத்து வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். சேலம் மாவட்டத்திலும் வேலைநிறுத்த போராட்டம் நடந்து வருகிறது.
இந்த போராட்டம் நேற்று 7-வது நாளாக நீடித்தது. வழக்கம்போல பெரும்பாலான தொழிலாளர்கள், தொழிற்சங்கத்தினர் பணிக்கு திரும்பவில்லை. போக்குவரத்து கழக நிர்வாகம் மாற்று டிரைவர்கள், கண்டக்டர்களை வைத்து முக்கிய ஊர்களுக்கு பஸ்களை இயக்கினர். குறைந்த அளவிலேயே பஸ்கள் இயக்கப்பட்டதால், பயணிகள் கூட்டம் அதிக அளவில் இருந்தது. இதுதவிர வழக்கம்போல, சேலம் மாநகரில் நகர பஸ்கள் இயக்கப்பட்டன.
போக்குவரத்து கழக தொழிலாளர்கள், தொழிற்சங்கத்தினர் கடந்த 2 நாட்களாக சாலைமறியல், தலைமை நிர்வாக அலுவலகம் முற்றுகை போன்ற போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று காலை 11 மணிக்கு சேலம் கோரிமேட்டில் உள்ள தொழிலாளர் நல அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இந்த போராட்டத்தில் தொ.மு.ச., சி.ஐ.டி.யு., ஐ.என்.டி.யூ.சி., பாட்டாளி தொழிற்சங்கம், தே.மு.தி.க. தொழிற்சங்கம், பணியாளர் நல சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகளும், தொழிலாளர்களும் என ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். அதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட முக்கிய நிர்வாகிகள், தொழிலாளர்களை கன்னங்குறிச்சி போலீசார் கைது செய்தனர். முன்னதாக, போராட்டத்திற்காக தொழிலாளர் நல அலுவலகம் முன்பு திரண்ட போக்குவரத்து தொழிலாளர்களை விரைந்து போராட்டத்தை முடிக்குமாறு போலீசார் நெருக்கடி கொடுத்தனர். இதனால், போராட்டத்தை சிறிது நேரத்தில் முடித்து கொண்டு அனைவரும் கலைந்து சென்றனர்.
சேலம் சூரமங்கலம் போலீசாரால், நேற்று முன்தினம் அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்க நிர்வாகிகள் 4 பேர் போலீஸ் நிலையம் அழைத்து வரப்பட்டனர். அவர்களிடம், பொது சொத்திற்கு சேதம் விளைவிக்க மாட்டோம் என போலீசார் எழுதி வாங்கி கொண்டு, 4 மணி நேரம் கழித்து விடுவித்தனர்.
இந்த நிலையில் பணிக்கு சென்ற சில தொழிலாளர்களை, வேலைநிறுத்தத்தில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வரும் டிரைவர்கள் சிலரை போக்குவரத்து கழக அதிகாரிகள் ஒரு பணிமனையில் இருந்து மற்றொரு பணி மனைக்கு இடமாற்றம் செய்து உத்தரவிட்டனர். மேட்டூர் பணிமனையில் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தை சேர்ந்த செம்பான் என்ற டிரைவர், அங்கிருந்து ஆத்தூர் பணிமனைக்கு மாற்றப்பட்டார். இதுபோல மேலும் சிலரை இடமாற்றம் செய்து அதிகாரிகள் உத்தரவிட்டிருப்பதாக தொழிற்சங்க நிர்வாகிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக தொழிற்சங்க நிர்வாகிகள் தரப்பில் கூறுகையில்,“சேலம் மாவட்டத்தில் நாளுக்கு நாள் பஸ்களின் இயக்கம் குறைந்து வருகிறது. இதனால், போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டத்தை ஒடுக்குவதற்காக பழிவாங்கும் நோக்கில் டிரைவர்களை இடமாற்றம் செய்து அதிகாரிகளால் மிரட்டப்படுகிறார்கள். இதற்கெல்லாம் தொழிலாளர்கள் அஞ்சமாட்டோம்“ என்றனர்.

Related Tags :
Next Story