கவுத்திமலையில் உள்ள வேடியப்பன் கோவிலுக்கு செல்லும் பாதையை சீரமைக்க வேண்டும்


கவுத்திமலையில் உள்ள வேடியப்பன் கோவிலுக்கு செல்லும் பாதையை சீரமைக்க வேண்டும்
x
தினத்தந்தி 11 Jan 2018 4:00 AM IST (Updated: 11 Jan 2018 4:37 AM IST)
t-max-icont-min-icon

கவுத்திமலையில் உள்ள வேடியப்பன் கோவிலுக்கு செல்லும் பாதை மோசமாக உள்ளது. அதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கலசபாக்கம்,

திருவண்ணாமலையை அடுத்த இனாம்காரியந்தல் ஊராட்சிக்கு உட்பட்டது வெங்காயவேலூர் கிராமம். அங்குள்ள கவுத்திமலை மீது வேடியப்பன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு வாரமும் திங்கள், வெள்ளிக்கிழமைகளில் மட்டும் ஒரு வேலை அபிஷேகம், பூஜை செய்யப்படுகிறது. வேடியப்பனுக்கு அபிஷேகம் செய்யப்படும் தண்ணீர் பக்தர்களுக்கு தீர்த்தமாக வழங்கப்படுகிறது.

உடல்நிலை சரியி்ல்லாதவர்கள், பயந்தவர்கள் உள்பட பல்வேறு பிரச்சினைகளில் பாதிக்கப்பட்டவர்கள் இந்த தீர்த்தத்தை வாங்கி தலை மற்றும் முகத்தில் தெளித்துக்கொண்டால் உடல்நிலை சரியாகி விடும் என்பது நம்பிக்கையாக உள்ளது. இதனால் இந்த கோவிலுக்கு ஒவ்வொரு வாரமும் திங்கள், வெள்ளிக்கிழமைகளி்ல் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். தீர்த்தத்தை வரிசையில் நின்று பக்தர்கள் பெற்று செல்கின்றனர்.

சரி செய்ய வேண்டும்

இந்த கோவிலுக்கு செல்லும் மலை ஏறும் பாதை கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த பலத்த மழையின் காரணத்தால் பக்தர்கள் நடந்து செல்ல முடியாத அளவிற்கு கரடுமுரடாக மாறிவிட்டது. இதனால் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், பக்தர்களும் கோரிக்கை வைத்து உள்ளனர். 

Next Story