குடிநீர் கேட்டு குமராட்சியில் காலிகுடங்களுடன் பொது மக்கள் ஆர்ப்பாட்டம்


குடிநீர் கேட்டு குமராட்சியில் காலிகுடங்களுடன் பொது மக்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 11 Jan 2018 4:51 AM IST (Updated: 11 Jan 2018 4:51 AM IST)
t-max-icont-min-icon

அத்திப்பட்டு கிராமத்தில் ஆற்றங்கரை மற்றும் வள்ளுவர் தெருவில் 45–க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

காட்டுமன்னார்கோவில்,

காட்டுமன்னார்கோவில் அருகே அத்திப்பட்டு கிராமத்தில் ஆற்றங்கரை மற்றும் வள்ளுவர் தெருவில் 45–க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அங்குள்ள ஒரு மினி குடிநீர் தொட்டி மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் குடிநீர் தொட்டிக்கு நீரேற்ற பயன்படும், மின்மோட்டார் பழுதானதால் கடந்த சில நாட்களாக சரியான முறையில் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. அருகில் உள்ள தெருக்களுக்கு சென்று தண்ணீர் பிடித்து வந்தனர்.

இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நேற்று, காலிக்குடங்களுடன் குமராட்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டம் செய்தன்.

தொடர்ந்து, அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய தலைவர் ஜெயகுமார் தலைமையில், அங்கிருந்த அதிகாரியிடம் கோரிக்கை மனு ஒன்றையும் பொதுமக்கள் வழங்கினர். அப்போது மாவட்டக்குழு உறுப்பினர் பிரகாஷ் உள்பட பலர் உடன் இருந்தனர்.


Next Story