திருத்தணி ரெயில் நிலையம் அருகே பிளஸ்–2 மாணவி பிணம் கொலையா? போலீசார் விசாரணை


திருத்தணி ரெயில் நிலையம் அருகே பிளஸ்–2 மாணவி பிணம் கொலையா? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 11 Jan 2018 5:15 AM IST (Updated: 11 Jan 2018 4:58 AM IST)
t-max-icont-min-icon

திருத்தணி ரெயில் நிலையம் அருகே பிளஸ்–2 மாணவி பிணமாக கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

திருத்தணி,

திருத்தணியை அடுத்த காசிநாதபுரம் காலனியை சேர்ந்தவர் வரதன். கட்டிட தொழிலாளி. இவரது மகள் தமிழரசி (வயது 17) திருத்தணியில் உள்ளஅரசினர் மகளிர் மேல் நிலைப்பள்ளியில் பிளஸ்–2 படித்து வந்தார். நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்ற தமிழரசி வீடு திரும்ப வில்லை. அவரை பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடி வந்தார்கள்.

இந்த நிலையில் திருத்தணி ரெயில் நிலையத்தை அடுத்த பழைய தர்மராஜா கோவில் பகுதியில் உள்ள ரெயில்வே தண்டவாளம் அருகே தமிழரசி உடல் சிதைந்து கை, கால்கள் துண்டிக்கப்பட்டு ஆடைகள் கிழிந்த நிலையில் இறந்து கிடந்தார்.

இது குறித்து அறிந்த தமிழரசியின் பெற்றோர் அங்கு வந்து பார்த்தனர். மகளின் உடலை பார்த்து கதறி அழுதார்கள். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அரக்கோணம் ரெயில்வே போலீசார் தமிழரசியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்கள். தமிழரசியின் தந்தை தனது மகளின் சாவில் மர்மம் உள்ளது என்றும் குற்றவாளிகளை கண்டு பிடித்து கடும் தண்டனை வழங்க வேண்டும் என்றும் போலீசீல் புகார் செய்துள்ளார்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து தமிழரசி கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story