புற்றுநோயால் பாதிக்கப்பட்ட கணவரை நினைத்து வேதனை; கடலில் குதித்து மனைவி தற்கொலை
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட கணவரை காப்பாற்ற முடியவில்லையே என்ற வேதனையில் மனைவி கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். அதே நாளில் கணவரின் உயிரும் பிரிந்தது.
அடையாறு.
சென்னை பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரையில் நேற்று முன்தினம் ஒரு பெண்ணின் சடலம் கிடந்தது. இதுகுறித்து சாஸ்திரிநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது அந்த பெண் மந்தைவெளியை சேர்ந்த உமா மகேஸ்வரி (வயது 46) என்றும், இவர் கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டார் என்றும் தெரியவந்தது. மேலும் இவர் தற்கொலை செய்து கொண்டது ஏன்? என்ற உருக்கமான தகவலும் வெளியாகியுள்ளது.
சென்னை மந்தைவெளி, செயின்ட் மேரிஸ் சாலையை சேர்ந்த உமா மகேஸ்வரியின் கணவர் பெயர் பிரகாஷ் வரதன் (50). இவர்களுக்கு கேசவன் (19) என்ற மகன் உள்ளார். இவர் தனியார் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். பிரகாஷ் வரதன், கிண்டி சிறுவர் பூங்காவில் வேலை செய்து வந்துள்ளார்.
8 மாதங்களுக்கு முன்பு பிரகாஷ் வரதனுக்கு உடல்நல குறைவு ஏற்பட்டது. ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் பரிசோதித்த போது, அவரது வயிற்றில் புற்றுநோய் கட்டி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு பல முறை அறுவை சிகிச்சை செய்தும், புற்றுநோய் கட்டி வளர்ந்து கொண்டே இருந்தது. இதனால், அவரை காப்பாற்ற முடியாது என்று டாக்டர்கள் கை விரித்து விட்டனர். சில நாட்களில் அவர் இறந்து விடுவார் என்றும் கூறிவிட்டனர்.
இதையடுத்து கணவர் பிரகாஷ் வரதனை, உமா மகேஸ்வரி வீட்டிற்கு அழைத்து வந்தார். கணவரை காப்பாற்ற முடியவில்லையே என்று மனவேதனையில் உமா மகேஸ்வரி அழுது புலம்பினார். அப்போது, கணவரிடம், ‘பூவும், பொட்டோடும் உங்களுக்கு முன்பே நான் இறந்து விடவேண்டும்’ என்று அடிக்கடி கூறி வந்தார்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் அதிகாலையில் கோவிலுக்கு சென்று வருவதாக கூறி உமா மகேஸ்வரி வெளியில் சென்றுள்ளார். அதன்பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதற்கிடையில், தன் மகன் கேசவன் செல்போனுக்கு உமா மகேஸ்வரி ஒரு குறுஞ்செய்தி அனுப்பி இருந்தார். அதில், ‘அப்பாவை நல்லபடியா பார்த்துக்கப்பா... அப்பா இல்லாம என்னால் வாழ முடியாதுப்பா... மாமாவுடன் நல்ல பையனா இருப்பா...’ என்று எழுதியிருந்தார்.
இதுகுறித்து கேசவன், அவரது தாய்மாமா சிவகுமாருடன் மந்தைவெளி போலீஸ் நிலையத்துக்கு சென்று புகார் செய்தார். பல இடங்களில் உமா மகேஸ்வரியை தேடி அலைந்தனர். இந்த நிலையில் தான், எலியட்ஸ் கடற்கரையில் உமா மகேஸ்வரி பிணமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பிணத்தை பார்த்த கேசவன், இது தன் தாய் என்று உறுதி செய்தார்.
இதற்கிடையில், உமா மகேஸ்வரி இறந்த அதே நாளில், நேற்று முன்தினம் இரவு 10.20 மணிக்கு பிரகாஷ் வரதன் இறந்தார். அவரது உடல் நேற்று மயிலாப்பூர் மயானத்தில் நேற்று தகனம் செய்யப்பட்டது. அதேபோல, கடற்கரையில் பிணமாக கிடந்த உமா மகேஸ்வரியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு நேற்று உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரது உடலும் அதே மயானத்தில் இன்று தகனம் செய்யப்பட உள்ளது.
கணவர் மீது கொண்ட அளவுக்கு அதிகமான பாசத்தினால், அவர் இந்த உலகத்தை விட்டு செல்வதற்கு முன்பே தன்னை மாய்த்துக்கொண்ட உமா மகேஸ்வரியின் செயல், அவர் வசிக்கும் பகுதியில் பெரும் சோகத்தை உண்டாக்கியுள்ளது.

Related Tags :
Next Story