மணலி சாலையில் கிரேன் எந்திரம் கவிழ்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு


மணலி சாலையில் கிரேன் எந்திரம் கவிழ்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 12 Jan 2018 4:00 AM IST (Updated: 12 Jan 2018 12:38 AM IST)
t-max-icont-min-icon

மேம்பாலம் அமைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த கிரேன் எந்திரம் திடீரென கவிழ்ந்து மணலி நெடுஞ்சாலையில் விழுந்தது. இதனால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருவொற்றியூர்,

திருவொற்றியூரில் இருந்து மணலி செல்லும் நெடுஞ்சாலையில் மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. நேற்று மாலை கிரேன் எந்திரம் மூலம் இரும்பு தூண்களை நிலை நிறுத்தும் பணி நடந்து கொண்டிருந்தது.

அப்போது எதிர்பாராதவிதமாக கிரேன் எந்திரம் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

கிரேன் சாலையில் விழுந்தபோது அதிர்ஷ்டவசமாக அந்த பகுதியில் யாரும் இல்லாததால் எந்தவித அசம்பாவிதமும் நடைபெறவில்லை. உடனடியாக மற்றொரு கிரேன் எந்திரம் மூலம் விபத்துக்குள்ளான கிரேன் எந்திரம் தூக்கி நிறுத்தப்பட்டது.

இந்த விபத்தால் மணலி நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story