சம்பா சாகுபடிக்கு ஏற்றவகையில் தஞ்சையில் 3-வது நாளாக மழை விவசாயிகள் மகிழ்ச்சி
சம்பா சாகுபடிக்கு ஏற்ற வகையில் தஞ்சையில் 3-வது நாளாக மழை பெய்து வருவது விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சாவூர்,
வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. அதன்படி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. தஞ்சை மாவட்டத்திலும் மழை பெய்து வருகிறது.
நேற்று முன்தினம் இரவு அவ்வப்போது லேசான தூறலுடன் பெய்து கொண்டே இருந்தது. நேற்று 3-வது நாளாகவும் பரவலாக மழை பெய்தது. நேற்று அதிகாலை 5.30 மணி அளவில் பரவலாக மழை பெய்தது. இதே போல் தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.
சம்பா சாகுபடி
தஞ்சை மாவட்டத்தில் தற்போது சம்பா, தாளடி சாகுபடி பணிகள் செய்யப்பட்டுள்ளன. முன்பட்ட சம்பா சாகுபடி தற்போது அறுவடை நடைபெற்று வருகின்றன. பல்வேறு இடங்களில் தண்ணீர் இன்றி சம்பா பயிர்கள் காய்ந்து வருகின்றன.
இந்த நிலையில் தஞ்சை மாவட்டத்தில் 3-வது நாளாக மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சாய்ந்த நிலையில் காணப்படுகின்றன.
மழை அளவு
தஞ்சை மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
அதிராம்பட்டினம் 3.1, கும்பகோணம் 6, பாபநாசம் 5, தஞ்சை 11, திருவையாறு 4, திருக்காட்டுப்பள்ளி 1, கல்லணை 1.2, அய்யம்பேட்டை 8, திருவிடைமருதூர் 7.4, மஞ்சளாறு 13.2, நெய்வாசல் தென்பாதி 1.2, பூதலூர் 3.4, வெட்டிக்காடு 2.2, மதுக்கூர் 1.2, பட்டுக்கோட்டை 1.2, பேராவூரணி 1, அணைக்கரை 24.6, குருங்குளம் 3.

Related Tags :
Next Story